லான்சுபோர்டைட்டு
Appearance
லான்சுபோர்டைட்டு (Lansfordite) என்பது MgCO3·5H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நீரேறிய மக்னீசியம் கார்பனேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. 1888 ஆம் ஆண்டு அமெரிக்க மாநிலமான பென்சில்வேனியாவின் லான்சுபோர்டு மாகாணத்தில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் முதன் முதலாக இக்கனிமம் கண்டறியப்பட்டது.
ஒற்றை சரிவச்சு கட்டமைப்பில் படிகமாகும் லான்சுபோர்டைட்டு பொதுவாக நிறமற்றும் அல்லது வெள்ளை நிறங்கொண்ட பட்டகமாகவும், விழுதுப்பாறைப் பொதியாகவும் தோன்றுகிறது. மென்மையான கனிமமான இதன் மோவின் கடினத்தன்மை 2.5 எனவும் ஒப்படர்த்தி 1.7 எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. கனிமத்தின் ஒளிவிலகல் குறியீட்டு எண் 1.46 முதல் 1.52 ஆக உள்ளது.