லாண்ட்ஸ்டெய்னர் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரத்த வகைகளை முதலில் கண்டறிந்த கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர் தன் ஆராய்ச்சியின் விளைவாக இரு விதிகளைத் தந்தார். இன்று பல்வேறு இரத்த வகைகள் கண்டு பிடிக்கப்பட்ட நிலையிலும், முக்கிய இரத்த வகையான ABO இரத்த வகைக்கு மட்டுமே பொருந்துவதாக இருப்பினும் அக்காலத்தில் இவரது விதி வெற்றிகரமான குருதியேற்றத்திற்கு உதவி பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறதென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

முதல் விதி[தொகு]

ஒரு குறிப்பிட்ட இரத்த வகை முறிதூண்டி(blood group antigen) குருதிச் சிவப்பணுவில் (R.B.C) இருக்குமாயின் அக்குறிப்பிட்ட வகை முறிபுரதம் (antibody)பிளாஸ்மாவில் (plasma) இருக்காது.

இரண்டாம் விதி[தொகு]

ஒரு குரு குறிப்பிட்ட இரத்த வகை முறிதூண்டி குருதிச் சிவப்பணுக்களில் இல்லாதிருக்குமாயின் அக்குறிப்பிட்ட வகைக்கான முறிபுரதம் பிளாஸ்மாவில் இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டு[தொகு]

ஒரு மனிதர் ஏ இரத்த வகையைச் சேர்ந்தவர் எனில் அவரின் குருதிச் சிவப்பணுக்களில் ஏ இரத்த வகையைச் சேர்ந்த முறிதூண்டி இருக்கும். அவரின் பிளாஸ்மாவில் எதிர்-ஏ முறிபுரதம் இருக்காது. எதிர்-பி முறிபுரதம் தான் இருக்கும்

குறைகள்[தொகு]

லாண்ட்ஸ்டெய்னரின் இவ்விதிகள் ஏபிஓ இரத்த வகைக்கு மட்டுமே முழுமையாகப் பொருந்தும். இதர இரத்த வகைகளான Rh, MN போன்றவற்றுக்கு இரண்டாம் விதியானது பொருந்தாது. இந்த இரத்த வகைகளில் முறிதூண்டி இல்லாதிருப்பினும் அதற்கெதிரான முறிபுரதம் பிளாஸ்மாவில் இயற்கையாகவே இருப்பதில்லை. இதனால் Rh-ve தாய் Rh+ve குழந்தையை முதன்முறையாகச் சுமக்கும் போது குழந்தைக்குப் பெரும்பாலும் எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.