உள்ளடக்கத்துக்குச் செல்

லாங் வாக் டூ ஃபிரீடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லாங் வாக் டூ ஃபிரீடம் (பொருள்:விடுதலைக்கான நெடிய வழி) என்பது தென்னாப்பிரிக்கத் தலைவரான நெல்சன் மண்டேலா எழுதிய நூல். இது இவருடைய வரலாற்றைப் பற்றியதாகும். இவர் இளவயதில் கறுப்பர் இன மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்டு சிறை சென்றது, ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு கட்சியின் தலைவரானது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். இதைத் தழுவி, மண்டேலா:லாங் வாக் டூ ஃபிரீடம் என்ற திரைப்படம் வெளியானது. கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாங்_வாக்_டூ_ஃபிரீடம்&oldid=3457865" இலிருந்து மீள்விக்கப்பட்டது