உள்ளடக்கத்துக்குச் செல்

லாங் மார்ச் 5

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லாங் மார்ச் 5 (Long March 5) என்பது சீன நாட்டின் அதிக எடைப் பளுவைத் தூக்கிச் செல்லும் செலுத்து வாகனம் ஆகும். இது சைனா அகதெமி பார் லாஞ்ச் வெகிக்கிள் டெக்னாலஜி உருவாக்கிய ஒன்றாகும். இந்த செலுத்து வாகனத்தின் திறன் அமெரிக்காவின் டெல்டா IV செலுத்து வாகனத்துடன் ஒப்பிடத் தகுந்ததாகும். 3 நவம்பர் 2016 அன்று இது முதன் முதலில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.[1]

வரலாறு

[தொகு]

இருபது ஆண்டுகள் திட்டமிட்ட பின்னர் சீன அரசு 2007 ம் ஆண்டில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இது சீனாவின் பெய்ஜிங் நகர் அருகேயுள்ள தியான்ஜின் எனும் கடற்கரை நகரில் கட்டுவிக்கப்பட்டது. இதன் முதல் சோதனை ஏவுதல் 16 ஆகஸ்டு 2016 அன்று செய்யபட்டது.

மேம்பாடு

[தொகு]

லாங் லெகோ என்பவர் இத்திட்டத்தின் தலைமைப் பொறியாளராக இருந்தார். சீன நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் இச்செலுத்து வாகனம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் அதிக எடையுடையவற்றை பூமியின் தாழ் வட்டப்பாதைக்கும் புவிநிலைச் சுற்றுப்பாதைத் திட்டஙளுக்கும் பயன்படுத்த இயலும். 2001 இல் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் இதன் தொடக்க மேம்பாட்டினை 2002 ஆம் ஆண்டில் தொடங்கியது. இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 2007 ஆண்டில் செய்யப்பட்டது.

ஏவுதல் விவரம்

[தொகு]
வாகன எண் தியதி ஏவுதளம் மேலடுக்கு நிலை செயற்கைக்கோள் செயல்திறன்
1 3 நவம்பர் 2016[2] வெஞ்சாங் LC-1 (Wenchang LC-1) YZ-2 ஸிஜியான் 17 (Shijian 17) வெற்றி
2 2 ஜூலை 2017 வெஞ்சாங் LC-1 (Wenchang LC-1) ஏதுமில்லை ஸிஜியான் 18 (Shijian 18 திட்டமிடப்பட்டுள்ளது
3 நவம்பர் 2017 வெஞ்சாங் LC-1 (Wenchang LC-1) ஏதுமில்லை சாங் 5 (Chang'e 5) திட்டமிடப்பட்டுள்ளது
4 2018 வெஞ்சாங் LC-1 (Wenchang LC-1) ஏதுமில்லை தியான்ஹி (Tianhe) திட்டமிடப்பட்டுள்ளது
5 2020 வெஞ்சாங் LC-1 (Wenchang LC-1) ஏதுமில்லை செவ்வாய்த் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Successful Launch of Long March-7 Rocket". English cctv இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2017.
  2. "China conducts Long March 5 maiden launch". nasaspaceflight இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாங்_மார்ச்_5&oldid=2919219" இலிருந்து மீள்விக்கப்பட்டது