லாங் பூங்கா
சன்கோர்ப் விளையாட்டரங்கு அல்லது பிறிஸ்பேன் விளையாட்டரங்கு | |
---|---|
இடம் | மில்ட்டன், குயின்ஸ்லாந்து |
அமைவு | 27°27′53″S 153°0′34″E / 27.46472°S 153.00944°E |
எழும்பச்செயல் ஆரம்பம் | 1911 |
திறவு | 1914 |
உரிமையாளர் | குயின்சுலாந்து அரசு |
தரை | புற்தரை |
கட்டிட விலை | A$ 280 மில்லியன் |
கட்டிடக்கலைஞர் | பொப்புலசு |
Structural engineer | அருப் குழுமம் |
முன்னாள் பெயர்(கள்) | ஜோன் பிறவுன் ஓவல் சன்கோர்ப்-மெட்வே அரங்கு லாங் பார்க் |
குத்தகை அணி(கள்) | |
அமரக்கூடிய பேர் | 52,500 |
லாங் பூங்கா (Lang Park) என்பது ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத் தலைநகர் பிரிஸ்பேன் நகரின் பில்ட்டன் புறநகரில் அமைந்துள்ள முக்கிய விளையாட்டரங்கம் உள்ள இடத்தின் ஆரம்பகாலப் பெயர் ஆகும். இவ்விளையாட்டரங்கம் தற்போது சன்கோர்ப் விளையாட்டரங்கம் (Suncorp Stadium) என்ற பெயரில் அதன் தற்போதைய விளம்பரதாரரின் பெயரில் அழைக்கப்படுகிறது. லாங் பார்க் ஆசியக்கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்காக பிரிஸ்பேன் விளையாட்டரங்கம் (Brisbane Stadium) என அழைக்கப்படுகிறது.
தற்போதுள்ள விளையாட்டரங்கம் மூன்றடுக்குகளைக் கொண்ட நாற்சதுர வடிவ அரங்காக 52,500 இருக்கைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. 1914 ஆம் ஆண்டில் முன்னாள் இடுகாடு ஒன்றின் மீது நிர்மாணிக்கப்பட்டது.[1][2] 1957 ஆம் ஆண்டில் பிறிஸ்பேன் ரக்பி லீக் இதனைக் குத்தகைக்கு எடுத்தது. ரக்பி தவிர்த்து, ரக்பி ஒன்றியம், மற்றும் கால்பந்து போட்டிகளும் இடம்பெறுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Suncorp Stadium History பரணிடப்பட்டது 2014-08-08 at the வந்தவழி இயந்திரம் retrieved 1 August 2014
- ↑ "Paddington Cemeteries.". Courier-Mail (Qld.: National Library of Australia): p. 4. 13 சூன் 1914. http://nla.gov.au/nla.news-article19954185. பார்த்த நாள்: 1 ஆகத்து 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- Suncorp Stadium – Official site