லாங் உட் சோலா காப்புக் காடு
Appearance
லாங் உட் சோலா காப்புக் காடு, (Longwood Shola Reserve Forest), தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகில் 116 எக்டேர் பரப்பளவில் அமைந்த வெப்பமண்டலக் காப்புக் காடு ஆகும். இது இடைவிடாத நன்னீர் சதுப்பு நிலங்கள் மற்றும் நீரோடைகளைக் கொண்டுள்ளது. இதுவே நீலகிரி மாவட்டத்தில் எஞ்சியிருக்கும் இயற்கை காடு ஆகும். 40 வகையான மரங்கள், நான்கு ஊர்வனவைகள், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு மட்டுமே சொந்தமான நீலகிரி மரப்புறா உள்ளிட்ட 177 பறவையினங்கள் மற்றும் 14 தவளை இனங்கள் இங்கு காணப்படுகிறது.[1] இது பல்வேறு உயிரினங்களுக்கு தனித்துவமான வாழ்விடத்தை வழங்குவதில் இந்த தளத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.லாங் உட் சோலா காப்புக் காட்டை ராம்சர் சாசனம் 24 மே 2023 அன்று ராம்சர் ஈர நிலமாக அறிவித்தது. [2]