லாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லாக்கி

லாக்கி (Laki அல்லது லக்காகீகார்) என்பது தெற்கு ஐஸ்லாந்தில் உள்ள ஓர் எரிமலை ஆகும்.

கிபி 934 இல் லாக்கி மலைத்தொடர் மிகப்பெரும் அளவில் தீக்கக்கியதில் 19.6 கிமீ³ (4.7 மைல்³) லாவாக்களை வீசியது.

1783-1784 காலப்பகுதியில் மீண்டும் இது தீக்கக்கியது. அப்போது கிட்டத்தட்ட 14 கிமீ³ (3.6 மைல்³) லாவாக்களையும் நச்சு புளோரீன்/கந்தக ஈரொக்சைட்டுக்களை வீசியதில் அப்பகுதியில் 50 விழுக்காடு கால்நடைகள் இறந்தன. இதனால் எழுந்த வரட்சி மற்றும் வறுமை காரணமாக சுமார் 9,000 பேர் கொல்லப்பட்டனர்.

வெள் இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாக்கி&oldid=3285492" இருந்து மீள்விக்கப்பட்டது