லாகோ பூட்டி பூட்டியா
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
பிறந்த நாள் | 20 அக்டோபர் 1994[1] | ||
பிறந்த இடம் | சிறீபாதம், சிக்கிம், இந்தியா[2] | ||
ஆடும் நிலை(கள்) | தடுப்பாட்ட வீரர் | ||
இளநிலை வாழ்வழி | |||
மங்கள்பாரி மகளிர் கால்பந்து அகாதமி | |||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
2014–2017 | பாடிலைன் எஸ் சி[3] | ||
2014 | நியூ ரேடியன்ட் | ||
2017–2019 | கோகுலம் கேரள மகளிர் அணி | ||
2018 | சன்ரைஸ் கால்பந்து அணி | ||
2021– | ஷிர்ஷ் பீகார் யுனைடெட் இந்திய பெண்கள் தேசிய கால்பந்து அணி | ||
பன்னாட்டு வாழ்வழி | |||
2012 | இந்திய மகளிர் கால்பந்து அணி 19 வயதிற்க்கும் கீழ் | ||
2013–2019 | இந்திய மகளிர் கால்பந்து அணி | 8 | (1) |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது. |
லாகோ பூட்டி பூட்டியா (Lako Phuti Bhutia) ஓர் இந்திய பெண்கள் கால்பந்து வீரர் ஆவார். இவர் 1994ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 20ம் நாள் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் றந்தார். பூட்டியா தற்போது ஷிர்ஷ் பீகார் யுனைடெட் மற்றும் இந்திய பெண்கள் தேசிய கால்பந்து அணிக்காக விளையாடடி வருகிறார்.
தொழில் ம்ற்றும் வாழ்க்கை
[தொகு]பூட்டியா மேற்கு சிக்கிமில் தொலைதூரத்தில் உள்ள பகுதியான ஸ்ரீபாதத்தைச் சேர்ந்தவர் ஆவார். மங்கள்பாரி என்ற மகளிர் கால்பந்து அகாடமியை தொடங்கினார். மேலும் பயிற்சியாளர் பால்டன் பூட்டியா என்பவரிடம் தனது பயிற்சியையும், விளையாட்டு திறமைகளை வளர்த்துக் கொண்டார்.[2]
லாகோ பூட்டி பூட்டியா 2014 ஆம் ஆண்டு மாலத்தீவு கிளப்பான நியூ ரேடியன்ட் எஸ்.சி.க்காகவும் விளையாடி இருக்கிறார். பின்னர் 2017–18 இந்திய மகளிர் லீக் சீசனுக்காக கோகுலம் கேரள மகளிர் அணியில் சேர்ந்தார்.
பூட்டியா 2018 ஆம் ஆண்டு பூட்டான் மகளிர் தேசிய சாம்பியன்ஷிப்பில் சன்ரைஸ் அணிக்காகவும் விளையாடி இருக்கிறார்.[4]
சர்வதேச போட்டிகள்
[தொகு]2012 ஆம் ஆண்டு, மலேசியாவில் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டு 19 வயதிற்க்கு உட்பட்டோர் மகளிர் சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டிக்காக தேசிய அணியில் இடம் பெற்றார். புஷ்பா சேத்ரி, அனுராதா சேத்ரி மற்றும் நிமா லாமு பூட்டியா ஆகியோருக்குப் பிறகு தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 4வது மாநிலப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். மலேசியாவுக்குச் செல்வதற்கு முன்பு குஜராத்தின் காந்திநகரில் ஒரு மாத பயிற்சி முகாமில் கலந்து கொண்டார்.[2]
லாகோ பூட்டி பூட்டியா தனது சகோதரி நிமா லாமு பூட்டியாவுடன் சேர்ந்து, 2013 ஆண்டு, ஏப்ரல் மாதம், 1ம் தேதி முதல் நடைபெற்ற சீனியர் மகளிர் தேசிய கால்பந்து பயிற்சி முகாமுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முகாம் ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுக்கான சீனியர் தேசிய அணியைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்டது. இவரது சகோதரி தனிப்பட்ட காரணங்களுக்காக முகாமில் கலந்து கொள்ள முடியவில்லை. லாகோ தேசிய அணியை 8 முறை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார் மற்றும் இவரது கணக்கில் 1 கோல் உள்ளது.[2]
கௌரவங்கள்
[தொகு]இந்தியா
மகளிர் சாம்பியன்ஷிப்: 2014,[5] 2019
நியூ ரேடியன்ட்
மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்: 2014
சன்ரைஸ்
பெண்கள் தேசிய லீக்கின் இரண்டாம் இடம்: 2018[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lako Phuti Bhutia". THE AIFF. Archived from the original on 29 சூலை 2014.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Sarbajna, Boudhayan. "Oinam Bembem Devi's & Lako Phuti Bhutia' s Foreign Stint Signals A Bright Future For Indian Women Football". The Hard Tackle. Archived from the original on 16 April 2021. Retrieved 20 July 2014.
- ↑ "Indian Women's League: Quartz SC score 1-0 upset win over Bodyline SC". arunfoot.com. 22 October 2016. Archived from the original on 15 January 2023. Retrieved 14 June 2023.
- ↑ "Sunrise Women's FC draw 1–1 against BFF Academy to top the league". kuenselonline.com. KUENSEL News Bhutan. 23 July 2018. Archived from the original on 24 October 2021. Retrieved 15 January 2023.
- ↑ "Bhutan (Women) 2018". RSSSF. Archived from the original on 15 January 2023. Retrieved 15 January 2022.