உள்ளடக்கத்துக்குச் செல்

லாகிரி மகாசாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாஹிரி மகாசாயர்
பத்மாசனத்தில் லாஹரி மகாசாயர்
பிறப்பு(1828-09-30)30 செப்டம்பர் 1828
குர்னி கிராமம், நதியா மாவட்டம், வங்காளம் (தற்கால மேற்கு வங்காளம்), பிரித்தானிய இந்தியா)
இறப்பு26 செப்டம்பர் 1895(1895-09-26) (அகவை 66)
வாரணாசி, ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா
இயற்பெயர்சியாமா சரண் லாஹிரி
தேசியம்இந்தியர்
சமயம்இந்து சமயம்
தலைப்புகள்/விருதுகள்யோகிராஜ், காசி பாபா
தத்துவம்யோகம்
குருமகா அவதார் பாபாஜி
கையொப்பம்[[File:|200px|alt=]]

லாஹிரி மகாசாயர் (Lahiri Mahasaya) ((30 செப்டம்பர் 1828 – 26 செப்டம்பர் 1895), கிரியா யோக தத்துவத்தை நிறுவிய மகா அவதார் பாபாஜியின் சீடரும்[1], யுக்தேசுவர் கிரியின் குருவும் ஆவார். இவர் யோகக் கலை மூலம் கிரியா யோகத்தை தமது குருவான மகா அவதார் பாபாஜி மூலம் கற்று, அதனை தமது சீடர்களுக்கு கற்றுக் கொடுத்தார்[2].

லாகி மகாசாயரின் சீடரான யுக்தேசுவர் கிரியின் சீடரான பரமஹம்ச யோகானந்தர் எழுதிய ஒரு யோகியின் சுயசரிதம் எனும் நூலில்[3] லாகிரி மகாசாயரின் மகிமையை எடுத்துரைத்துள்ளார்.[4] [5][6]

வரலாறு

[தொகு]

லாகிரி மகாசாயரின் இயற்பெயர் சியாமா சரண் லாகிரி ஆகும். இவர் வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள குர்னி கிராமத்தில் கௌர்மோகன்-முக்தகேசி பெற்றோருக்கு 30 செப்டம்பர் 1828 அன்று பிறந்தார்.[7]1832ஆம் ஆண்டில் மழை வெள்ளத்தில் தமது தாயரையும், வீட்டையும் இழந்த லாகிரி மகாசாயர், தமது தகப்பனாருடன் வாரணாசியை அடைந்தார். அங்கு லாகிரி மகாசாயர் தத்துவம், சமசுகிருதம் மற்றும் ஆங்கில மொழிகளைக் கற்றார். 1846ஆம் ஆண்டில் காசிமணி எனும் பெண்ணை மணந்தார். 1851ஆம் ஆண்டு முதல் பயிற்றாசிரியர் (tutor) மற்றும் எழுத்தராகப் பணி புரிந்தார்.[1].

27 நவம்பர் 1861 அன்று லாகிரி மகாசாயர் தற்போதைய உத்தராகண்டம் மாநிலத்தின் ராணிகேத் நகரம் அருகே மகா அவதார் பாபாஜியை சந்தித்து சீடரானார்.[1][8] பாபாஜி லாகிரி மகாசாயருக்கு கிரியா யோகப் பயிற்சி வழங்கினார்[4].பின்னர் ஆயிரக்கணக்கான தமது சீடர்களுக்கு லாஹிரி மகாசாயர் கிரியா யோகப் பயிற்சி வழங்கினார். இவரது சீடர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் யுக்தேசுவர் கிரி, திங்கௌரி லாகிரி, பஞ்சனன் பட்டச்சாரியா மற்றும் கேசவானந்த பிரம்மச்சாரி ஆவார். 1895ஆம் ஆண்டில் லாஹிரி மகாசாயர் மறைந்தார்.[8]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Jones, Constance; Ryan, James (2008). Encyclopedia of Hinduism. Internet Archive. New York : Checkmark Books, an imprint of Infobase Publishing. pp. 255–256. ISBN 978-0-8160-7336-8.
  2. லாஹிரி மகாசாயர் இந்தியாவின் தலைசிறந்த யோக குரு
  3. பேரன்புக்கு வழிகாட்டும் ஒரு யோகியின் சரிதம்
  4. 4.0 4.1 Miller, Timothy (1995). America's alternative religions. Internet Archive. Albany: State University of New York Press. p. 178. ISBN 978-0-7914-2397-4.
  5. "Who Are All Those People in SGT Peppers Lonely Hearts Club Band - Spacious Planet". Archived from the original on 24 அக்டோபர் 2011. Retrieved 16 செப்டெம்பர் 2023.
  6. லாஹிரி மஹாசயாவின் மகிமை | ஒரு யோகியின் சுயசரிதம்-அத்தியாயம் 1- பாகம் 3
  7. Yogananda, Paramahansa (1998). Autobiography of a Yogi (13th ed.). Self-Realization Fellowship. p. 292.
  8. 8.0 8.1 Williamson, Lola (2010). Transcendent in America: Hindu-inspired Meditation Movements as New Religion. NYU Press. p. 66.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாகிரி_மகாசாயர்&oldid=4332689" இலிருந்து மீள்விக்கப்பட்டது