லலிதா கன்னேகண்டி
மாண்புமிகு நீதியரசர் கன்னேகண்டி லலிதாகுமாரி | |
|---|---|
| நீதிபதி, கர்நாடக உயர் நீதிமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 28 சூலை 2023 | |
| பரிந்துரைப்பு | தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் |
| நியமிப்பு | திரௌபதி முர்மு |
| நீதிபதி, தெலங்காணா உயர் நீதிமன்றம் | |
| பதவியில் 15 நவம்பர் 2021 – 27 சூலை 2023 | |
| பரிந்துரைப்பு | என். வி. இரமணா |
| நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
| நீதிபதி, ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் | |
| பதவியில் 2 மே 2020 – 14 நவம்பர் 2021 | |
| பரிந்துரைப்பு | எஸ். ஏ. பாப்டே |
| நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | லலிதா கன்னேகண்டி 5 மே 1971 பாபட்லா, குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
| துணைவர் | கே. விஜய பிரசாத் |
| பிள்ளைகள் | கௌதம் மானசா |
| பெற்றோர் | கே. ஏ. சௌதரி கே. அமரேஸ்வரி |
| முன்னாள் மாணவர் | பதாலா ராமா ரெட்டி சட்டக் கல்லூரி, உசுமானியா பல்கலைக்கழகம் |
கன்னேகண்டி லலிதாகுமாரி (Kanneganti Lalithakumari பிறப்பு: 5 மே 1971) இந்திய நீதிபதி ஆவார். தற்போது கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னர் தெலங்காணா உயர் நீதிமன்றம், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.[1][2]
ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்
[தொகு]லலிதாகுமாரி, செருவு ஜம்முலபாலேம் கிராமத்தில் பிறந்தார்.[3] ஐதராபாத்து இந்தியாவில் உள்ள புனித தெரசா பள்ளி, நாகார்ஜுனா இளையோர் கல்லூரியில் கல்வி பயின்றார். பின்னர், நாம்பள்ளியில் உள்ள வனிதா மகாவித்யாலயாவில் 1991ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார்.[3] தொடர்ந்து, உசுமானியா பல்கலைக்கழகத்தின் பதாலா ராமா ரெட்டி சட்டக் கல்லூரியில் 1994ஆம் ஆண்டு இளங்கலைச் சட்டம் பட்டம் பெற்றார்.[3]
பணிவாழ்க்கை
[தொகு]1994 டிசம்பர் 28 அன்று ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து, எம். ஆர். கே. சௌதரி, கே. ஹரிநாத் மற்றும் ஓ. மனோஹர் ரெட்டி ஆகியோரின் அலுவலகங்களில் சட்டப் பயிற்சியைத் தொடங்கினார்.
குற்றவியல், அரசியலமைப்புச் சட்டம், வரிவிதிப்பு, அரசு சேவை, சேவை சாராத வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள் மற்றும் குடும்பநல வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு சட்டத் துறைகளில் வழக்காடியுள்ளார்.
2020 மே 2 அன்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் நீதிபதியாக பொறுப்பேற்றார். பின்னர் 2021 நவம்பர் 15 அன்று தெலங்காணா உயர் நீதிமன்றம் நீதிபதியாக மாற்றப்பட்டார்.
குறிப்பிடத்தக்க தீர்ப்புகள்
[தொகு]- கோவிட்-19 காலப் புலம்பெயர் தொழிலாளர் நெருக்கடி [4]
- விசாகப்பட்டினம் எல்ஜி பாலிமர்ஸ் நச்சு வாயுக் கசிவு தொடர்பான தானாக முன்வந்த பொதுநல வழக்கு [5]
- மருத்துவப் பரிசோதனை தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றாதது குறித்து தானாக முன்வந்து விசாரணை[6]
- சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைக்கும் வகையில் அனைத்து தண்டனைக் கைதிகளும் விசாரணைக் கைதிகளும் 90 நாட்களுக்கு இடைக்காலப் பிணையில் விடுவிக்க உத்தரவு[7]
- பிணை உத்தரவுகளை உடனடியாக அனுப்புவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Three AP high court judges take oath amid lockdown | Vijayawada News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). TNN. 3 May 2020. Retrieved 2021-08-06.
- ↑ Deccan Chronicle (14 July 2023). "One judge each from AP and TS transferred out" இம் மூலத்தில் இருந்து 14 July 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230714040248/https://www.deccanchronicle.com/nation/in-other-news/140723/one-judge-each-from-ap-and-ts-transferred-out.html.
- 1 2 3 "High Court of Andhra Pradesh CJI & Sitting Judges".
- ↑ "Open shelters for migrant workers, HC tells Andhra govt". The New Indian Express. 16 May 2020. Retrieved 2021-08-08.
- ↑ "Andhra HC Orders Seizure of LG Polymers Plant, Directors Not to Leave Country". News18 (in ஆங்கிலம்). 2020-05-25. Retrieved 2021-08-08.
- ↑ India, The Hans (2021-05-22). "MP Raghurama Krishna Raju case: Andhra Pradesh High Court serious over failure to follow its orders". www.thehansindia.com (in ஆங்கிலம்). Retrieved 2021-08-08.
- ↑ "Andhra Pradesh HC: Release All Convicts, Under Trial Prisoners on Interim Bail for 90 Days". The Wire. Retrieved 2021-08-08.
- ↑ Sirohi, Sanjeev (2021-07-24). "Andhra Pradesh High Court issues guidelines for prompt transmission of bail orders". The Daily Guardian (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-08-08.