உள்ளடக்கத்துக்குச் செல்

லபுவான் போர்

ஆள்கூறுகள்: 5°19′13″N 115°12′40″E / 5.32028°N 115.21111°E / 5.32028; 115.21111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லபுவான் போர்
Battle of Labuan
வடக்கு போர்னியோ போர் - ஒரு பகுதி
Black and white photo of a man who is wearing a military uniform and armed with a gun crouching on a step incline.
லபுவான் வானூர்தி ஓடுபாதையில்
ஓர் ஆத்திரேலிய போர்வீரர் (10 சூன் 1945)
நாள் 10–21 சூன் 1945
இடம் லபுவான், நீரிணைக் குடியேற்றங்கள்
மலேசியா

5°19′13″N 115°12′40″E / 5.32028°N 115.21111°E / 5.32028; 115.21111
நேச நாடுகள் வெற்றி
பிரிவினர்
 ஆத்திரேலியா
 ஐக்கிய அமெரிக்கா
 ஐக்கிய இராச்சியம்
 சப்பான்
தளபதிகள், தலைவர்கள்
ஆத்திரேலியா செல்வின் போர்ட்டர் சப்பானியப் பேரரசு சிச்சிரோ ஒக்குயாமா
படைப் பிரிவுகள்
ஆத்திரேலியா 24-ஆவது படைப்பிரிவு சப்பானியப் பேரரசு 371-ஆவது காலாட்படை
பலம்
1 படையணி குழு 550
இழப்புகள்
34 இறப்பு; 93 காயம் 389 இறப்பு; 11 போர்க் கைது

லபுவான் போர் (ஆங்கிலம்: Battle of Labuan; மலாய்: Pertempuran Labuan) என்பது இரண்டாம் உலகப் போரின் போது சப்பானிய கட்டுப்பாட்டில் இருந்த போர்னியோ லபுவான் தீவில் நடந்த போராகும். 1945 சூன் மாதம், நேச நாடுகளுக்கும்[1] சப்பானிய படைகளுக்கும் இடையில் நடந்த இந்தப் போர், வடக்கு போர்னியோ போரின் ஒரு தொடர்க் கட்டமாகும்.

புரூணை விரிகுடாவைக் கைப்பற்றுவது; அதை எதிர்காலத் தாக்குதல்களைத் தவிர்க்க உதவும் ஒரு தளமாக மாற்றுவது; இதுவே நேச நாட்டுப் படைகளின் முதன்மைத் திட்டமாக இருந்தது. மேலும் லபுவான் போர் நடப்பதற்கான மூல காரணமாகவும் அமைந்தது.

பொது

[தொகு]

1945 மே மாதம், லபுவான் தீவில் சில வாரங்களுக்கு வான்வழித் தாக்குதல்கள்; மற்றும் கடற்படை குண்டுவீச்சுகள் நடத்தப்பட்டன.[2][3] அதன் பிறகு, 1945 சூன் 10-ஆம் தேதி, ஆத்திரேலியாவின் 24-ஆவது படைப்பிரிவின் வீரர்கள், ஐக்கிய அமெரிக்க கடற்படை கப்பல்கள்;[4][5] மற்றும் ஆத்திரேலிய கடற்படையின் கப்பல்கள் மூலமாக லபுவானில் தரையிறக்கப்பட்டனர்.[6][7][8]

ஆத்திரேலியப் படையினர், லபுவான் தீவின் துறைமுகத்தையும்; லபுவான் வானூர்தி நிலையத்தையும் உடனடியாகக் கைப்பற்றினர். அந்தக் கட்டத்தில் ஒரு சிறிய எண்ணிக்கையிலான சப்பானியப் படையினர், லபுவானின் உட்புறத்தில் மட்டுமே மையமிட்டு இருந்தனர். மேலும், ஆத்திரேலியப் படையினர் தரையிறங்கும் போது சிறிய அளவிலான எதிர்ப்பையும் வழங்கினர்.[9]

வான்வழித்தாக்குதல்

[தொகு]
Black and white photo of three men wearing military uniforms and carrying guns with three elderly men and a teenager wearing civilian clothes
லபுவானில் பொதுமக்களுடன் ஆத்திரேலிய வீரர்கள்.

சப்பானிய படையினர் மையமிட்டு இருந்த பகுதிக்குள் ஊடுருவும் ஆத்திரேலியர்களின் முதற்கட்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியின் மீது வான்வழித்தாக்குதல் மூலமாகப் பெரிய அளவில் குண்டுகள் வீசப்பட்டன. ஆத்திரேலியர்களின் தொடர் தாக்குதல்களினால் சப்பானியப் படைகளின் எதிர்ப்புகள் பலனளிக்கவில்லை. சப்பானியர் தரப்பில் நிறைய உயிருடற் சேதங்கள் ஏற்பட்டன.[10]

1945 சூன் 21-ஆம் தேதி, ஆத்திரேலியப் படைகள், சப்பானியப் படையினரின் நிலைகளைத் தீவிரமாகத் தாக்கின. அடுத்த சில நாட்களில், லபுவான் தீவில் எஞ்சியிருந்த சப்பானியத் துருப்புக்களும் கொல்லப்பட்டனர்;[11][12] மேலும் பலர் கைது செய்யப்பட்டனர்.[13][14] இந்தப் போரில் மொத்தம் 389 சப்பானிய வீரர்கள் கொல்லப்பட்டனர், 11 பேர் பிடிபட்டனர்.[15] ஆத்திரேலிய தரப்பில் 34 ஆத்திரேலியர்கள் கொல்லப்பட்டனர்.[16]

மேற்கோள்கள்

[தொகு]
  1. McCarthy 2023, ப. 30.
  2. Odgers 1968, ப. 468.
  3. Waters 1995, ப. 46–47.
  4. 24th Brigade 1945, ப. 16.
  5. Gill 1968, ப. 640.
  6. Odgers 1968, ப. 469.
  7. Morison 2002, ப. 264.
  8. Long 1963, ப. 461.
  9. Long 1963, ப. 467.
  10. Long 1963, ப. 467–468.
  11. Long 1963, ப. 472.
  12. "2/12th Cavalry Commando Squadron". Australian War Memorial. Retrieved 5 January 2015.
  13. Long 1963, ப. 474–475.
  14. 24th Brigade 1945, ப. 36.
  15. Long 1963, ப. 475.
  16. Donnison 1956, ப. 181.

மேற்கோள் நூல்கள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லபுவான்_போர்&oldid=4406828" இலிருந்து மீள்விக்கப்பட்டது