லபுவான் பிரித்தானிய முடியாட்சி
லபுவான் பிரித்தானிய முடியாட்சி Crown Colony of Labuan Jajahan Mahkota Labuan | |
|---|---|
| 1848–1946 | |
| நாட்டுப்பண்: பிரித்தானிய நாட்டுப்பண் (1946–1952) இறைவன் அரசியைக் காப்பாற்றுவாராக. (1952–1957) | |
லபுவான் வரைபடம், 1888 | |
| நிலை | குடியேற்ற முடியாட்சி |
| தலைநகரம் | விக்டோரியா, லபுவான் |
| பேசப்படும் மொழிகள் | ஆங்கிலம், மலாய், சீனம் |
| அரசர் | |
• 1848–1890 | விக்டோரியா அரசி (முதல்) |
• 1936–1946 | ஆறாம் ஜோர்ஜ் (இறுதி) |
| ஆளுநர் | |
• 1848–1852 | ஜேம்சு புரூக் (முதல்) |
• 1945–1946 | செந்தோன் தாமஸ் (கடைசி) |
| வரலாற்று சகாப்தம் | பிரித்தானிய பேரரசு |
| 1848 | |
| 1890 | |
| 1904 | |
| 1 சனவரி 1907 | |
| 3 சனவரி 1942 | |
| 10 சூன் 1945 | |
| 15 சூலை 1946 | |
| மக்கள் தொகை | |
• 1864[1] | 2000 |
• 1890[2] | 5853 |
• 1911[3] | 6545 |
• 1941[4] | 8963 |
| நாணயம் | வடக்கு போர்னியோ டாலர் (1890–1907) நீரிணை டாலர் (1907–1939) மலாயா டாலர் (1939–1946) |
| தற்போதைய பகுதிகள் | மலேசியா ∟ லபுவான் |
•
புரூணை சுல்தானகம் 1368 –1846[5]
•ஐக்கிய இராச்சியம் 1846–1848
•லபுவான் அரச குடியேற்றம் 1848–1941
•பிரித்தானிய வடக்கு போர்னியோ 1890–1904
•ஐக்கிய இராச்சியம் 1904–1906
•நீரிணை குடியேற்றங்கள் 1907–1941[6]
•சப்பானிய இராச்சியம் 1942–1945
•பிரித்தானிய வடக்கு போர்னியோ 1946–1963[6]
•மலேசியா 1963–இன்று
லபுவான் பிரித்தானிய முடியாட்சி (ஆங்கிலம்: Crown Colony of Labuan; மலாய்: Jajahan Mahkota Labuan) என்பது 1848-ஆம் ஆண்டில் போர்னியோ தீவின் வடமேற்குக் கரையில் உருவாக்கப்பட்ட பிரித்தானிய முடியாட்சியின் ஒரு நிருவாக ஆளுமையைக் குறிப்பிடுவதாகும். 1846-ஆம் ஆண்டு புரூணை சுல்தானகத்திடம் இருந்து லபுவான் தீவைக் கையகப்படுத்திய பிறகு லபுவான் பிரித்தானிய முடியாட்சி உருவாக்கப்பட்டது.
லபுவான் முதன்மைத் தீவுடன்; பூரோங் தீவு, தாட் தீவு (Daat Island), குரமான் தீவு (Kuraman Island), பாப்பான் தீவு, ருசோக்கான் கெச்சில் தீவு (Rusukan Kecil), மற்றும் ருசோக்கான் பெசார் தீவு (Rusukan Besar) எனும் 6 சிறிய தீவுகளையும் லபுவான் நிலப்பகுதி கொண்டுள்ளது.[7] லபுவான் எனும் பெயர் மலாய் மொழியில் துறைமுகம் என்பதைக் குறிக்கும் லபுகான் (Labuhan) என்னும் சொல்லில் இருந்து உருவானது.[8]
வரலாறு
[தொகு]பிரித்தானியர் எதிர்பார்ப்பு
[தொகு]லபுவான் துறைமுகம் இரண்டாவது சிங்கப்பூராக மாறும் என பிரித்தானியர் எதிர்பார்த்தனர். லபுவான் ஒரு பாதுகாக்கப்பான துறைமுகத்தைக் கொண்டிருந்தது. வணிகக் கடல்வழிகளைப் பாதுகாக்கவும்; கப்பல்களைச் செப்பனிடவும்; உத்திசார் அடிப்படையில் நல்ல ஒரு கடற்படைத் தளத்தை நிறுவுவதற்கும் ஏற்றதாக இருந்தது.
அதன் பருவகாலநிலை ஒப்பீட்டளவில் நல்வாழ்விற்கான சிறந்த இடமாகவும் இருந்தது; சிறந்த நன்னீர் ஊற்றுகளையும் கொண்டிருந்தது. புரூணை சுல்தானகத்தின் கடற்கரைகளில்; லபுவான் நல்ல ஒரு புவியியல் அமைப்பைக் கொண்டிருந்தது. ஆகவே அது ஒரு வணிகத் தளமாக மாற்றப் படுவதற்கும் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் போதுமான வருவாயை ஈட்டும் என்று நம்பப்பட்ட நிலக்கரி படிவுகளும் இருந்தன.
நிலக்கரி உற்பத்தி
[தொகு]இருப்பினும், காலப் போக்கில் லபுவானின் நிலக்கரி உற்பத்தி சரிவு க்ண்டது. பிரித்தானியர்களின் எதிர்பார்ப்புகளும் நிறைவேறாமல் தோல்வியில் முடிந்தன. நிலக்கரி உற்பத்தி படிப்படியாகச் சரிவு கண்டதால், முதலீட்டாளர்களில் பெரும்பாலோர் தங்களின் முதலீடுகளை மீட்டுக் கொண்டு லபுவானை விட்டு வெளியேறினர். நிலக்கரி உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரத் தளவாடப் பொருட்களும் அங்கேயே கைவிடப்பட்டன; மேலும், அங்கே பணியில் அமர்த்தப்பட்ட சீனத் தொழிலாளர்களும் கைவிடப்பட்டனர்.[9]
பின்னர் சீனத் தொழிலாளர்கள் தங்கள் சொந்தத் தொழில்களைத் தொடங்கினர். அவர்களில் பலர் பின்னர் காலத்தில் லபுவான் தீவின் முக்கிய வணிகர்களாகவும் மாறினர். அந்தக் காலக்கட்டத்தில், லபுவான் தீவில் பறவைக் கூடுகள், முத்து, கற்பூரம் போன்றவை பெரிய அளவில் கிடைத்தன. மேலும் அந்தக் கட்டத்தில் தேங்காய், ரப்பர், சவ்வரிசி போன்றவை முக்கிய உற்பத்திப் பொருட்களாகவும் விளங்கின.[9] அதிக அளவில் உற்பத்தியும் செய்யப்பட்டன.
புரூணை சுல்தானகம்
[தொகு]15-ஆம் நூற்றாண்டு தொடங்கி அடுத்து வந்த மூன்று நூற்றாண்டுகள் வரையில் லபுவான் உட்பட போர்னியோவின் வடக்கு, மேற்குக் கரைகளின் கடல்நிலப் பகுதிகள் புருணை சுல்தானகத்தின் பகுதிகளாக இருந்தன.[5]
18-ஆம் நூற்றாண்டில், லபுவான் நிலப்பகுதி பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 1846 திசம்பர் 18-ஆம் தேதி, புருணை புரூணை சுல்தான் ஒமார் அலி சாய்புதீன் (Omar Ali Saifuddin II) என்பவருடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி, லபுவான் தீவை பிரித்தானியா பேரரசிற்காக ஜேம்சு புரூக் (James Brooke) என்பவர் பெற்றுக் கொண்டார்.
ரோட்னி முண்டி
[தொகு]

பிரித்தானியக் கடற்படை அதிகாரி ரோட்னி முண்டி (Rodney Mundy) என்பவர் புரூணை நாட்டிற்குச் சென்று உடன்பாட்டு முடிவுகளை மேற்பார்வை செய்தார். 1846 திசம்பர் 24-ஆம் தேதி, லபுவான் தீவு பிரித்தானிய அரசின் குடியேற்ற நாடானது.[10] கடற்கொள்ளையர்களுக்கு எதிரான போரில் பிரித்தானியா செய்த உதவிகளுக்காக லபுவான் தீவு பிரித்தானியாவுக்கு வழங்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது.
வேறு சில சான்றுகளும் உள்ளன. அரச கடற்படையினால் புரூணை சுல்தான் அச்சுறுத்தப் பட்டதாகவும், அதற்கு அடிபணிந்தே லபுவான் தீவைப் பிரித்தானியாவுக்கு வழங்க புரூணை சுல்தான் இணங்கினார் எனவும் அந்தச் சான்றுகள் கூறுகின்றன. [11]
இரண்டாம் உலகப் போர்
[தொகு]இரண்டாம் உலகப் போரின் போது, 1942 சனவரி 3 தொடங்கி சூன் 1945 வரையில் சப்பானின் பிடியில் லபுவான் தீவு இருந்தது. அந்தக் கட்டத்தில், சப்பானியக் கடற்படை, வடக்கு போர்னியோ முழுவதையும் கைப்பற்றி இருந்தது.[12]
இந்தத் தீவு சப்பானியப் படைகளுக்கு நிருவாக மையமாகவும் சேவையாற்றியது.[13] சப்பானிய அரசு இத்தீவுக்கு மைடா தீவு (Maida Island) எனப் பெயரிட்டிருந்தது.
வடக்கு போர்னியோவில் ஒரு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்ட சப்பானிய இராணுவத் தளபதி மைடா சீமா (Toshinari Maeda) என்பவரின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. சரவாக் பிந்துலு வானூர்தி நிலையத்தைத் திறப்பதற்காக சென்றபோது, வானூர்தி விபத்தில் மைடா சீமா கொல்லப்பட்டார்.[10]
விக்டோரியா நகரம்
[தொகு]இரண்டாம் உலகப் போரில் லபுவான் தீவின் தலைநகரமான விக்டோரியா நகரம்; நேச நாடுகளின் குண்டுவீச்சுகளால் சேதமடைந்தது. எனினும் போருக்குப் பிறகு புனரமைப்பு செய்யப்பட்டது. லபுவான் தீவு அதன் முந்தைய பெயரைப் பெற்று பிரித்தானிய போர்னியோவில் இராணுவ நிருவாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. சூலை 15, 1946-இல் வடக்கு போர்னியோ பிரித்தானிய முடியாட்சியுடன் இணைக்கப்பட்டது.[14]
பின்னர் 1963-ஆம் ஆண்டில் சபா மாநிலத்துடன் இணைக்கப்பட்டு மலேசியாவின் ஒரு பகுதியாக மாறியது.[15] 1984-ஆம் ஆண்டில், சபா அரசாங்கம் லபுவானை மலேசிய மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைத்தது. பின்னர் அது ஒரு தனி கூட்டரசு பிரதேசமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. லபுவான் ஒரு கடல்கடந்த நிதி மையமாக மாறும் வகையில் நிர்வாகச் சீரமைப்பு செய்யப்பட்டது. 1990-இல் இது ஒரு பன்னாட்டு கடல்கடந்த நிதி மையமாகவும் தீர்வையற்ற வணிக மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டது.[16]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Geography of British Colonies 1864, ப. 31.
- ↑ Hong Kong Daily Press Office 1904, ப. 792.
- ↑ Hong Kong Daily Press Office 1912, ப. 1510.
- ↑ Steinberg 2016, ப. 225.
- ↑ 5.0 5.1 R. W. McColl (1 January 2005). Encyclopedia of World Geography. Infobase Publishing. pp. 123–. ISBN 978-0-8160-7229-3.
- ↑ 6.0 6.1 United States. Hydrographic Office (1917). Asiatic Pilot: The coasts of Sumatra and the adjacent straits and islands. Hydrographic office under the authority of the secretary of the navy.
- ↑ "Islands in Labuan Island". 2025 Tripadvisor. Retrieved 12 November 2025.
- ↑ Bradbury & Evans (1856). "Crawfurd, John, A descriptive dictionary of the Indian islands & adjacent countries". London: Columbia University Libraries. p. 203. Retrieved 29 April 2014.
- ↑ 9.0 9.1 "Labuan Island –By 1890 Labuan had become a liability with no prospect of any improvement in its financial position so the British Government decided to cut its losses". Malaysia 1786 - 1957 (in ஆங்கிலம்). 3 August 2023. Retrieved 12 November 2025.
- ↑ 10.0 10.1 Graham Saunders (5 November 2013). A History of Brunei. Routledge. pp. 78 & 123. ISBN 978-1-136-87394-2.
- ↑ W. H. Treacher, C.M.G. M.A. Oxon (1891). "British Borneo: Sketches of Brunai, Sarawak, Labuan and North Borneo" (PDF). University of California Libraries. Trinity Theological College. pp. 12 / Chapter VI. Pages 84–92. Archived from the original (PDF) on 11 October 2013. Retrieved 29 April 2014.
- ↑ T. A. Edwin Gibson; G. Kingsley Ward (1989). Courage remembered: the story behind the construction and maintenance of the Commonwealth's military cemeteries and memorials of the wars of 1914–1918 and 1939–1945. McClelland & Stewart. ISBN 978-0-7710-8786-8.
- ↑ Keat Gin Ooi (October 2004). Southeast Asia: a historical encyclopedia, from Angkor Wat to East Timor. ABC-CLIO. ISBN 978-1-57607-770-2.
- ↑ Paul H. Kratoska (2001). South East Asia, Colonial History: Peaceful transitions to independence (1945–1963). Taylor & Francis. pp. 129–. ISBN 978-0-415-24784-9.
- ↑ Paul H. Kratoska (2001). South East Asia, Colonial History: Peaceful transitions to independence (1945–1963). Taylor & Francis. pp. 129–. ISBN 978-0-415-24784-9.
- ↑ "Laws of Malaysia A585 Constitution (Amendment) (No.2) Act 1984". Government of Malaysia. Department of Veterinary Services. Archived from the original on 29 April 2014. Retrieved 28 April 2014.
நூல்கள்
[தொகு]- Keppel, Henry; Brooke, James; WalterKeating, Kelly (1847). "The expedition to Borneo of H.M.S. Dido for the suppression of piracy : with extracts from the journal of James Brooke, Esq., of Sarawak". University of California Libraries. London : Chapman and Hall. p. 347.
- Brooke, James; Mundy, Rodney George (1848). "Narrative of events in Borneo and Celebes, down to the occupation of Labuan : from the journals of James Brooke esq., rajah of Sarāwak, and governor of Labuan. Together with a narrative of the operations of H. M. S. Iris". Harvard University. London : J. Murray. p. 441.
- Motley, James; Dillwyn, Lewis Llewellyn (1855). "Contributions to the natural history of Labuan, and the adjacent coasts of Borneo". Smithsonian Libraries. London : J. Van Voorst. p. 118.
- Treacher, W. H (1891). "British Borneo: sketches of Brunai, Sarawak, Labuan, and North Borneo". University of California Libraries. Singapore, Govt. print. dept. p. 190.
மேலும் காண்க
[தொகு]- லபுவான்
- லபுவான் நகராட்சி
- லபுவான் மக்களவைத் தொகுதி
- பிரித்தானிய போர்னியோ
- மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள்