லட்சுமி பிரானேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லட்சுமி பிரானேஷ்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்
பதவியில்
2 டிசம்பர் 2002 – 30 ஏப்ரல் 2005
முன்னையவர்சுகவனேஸ்வர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
கல்விஇ. ஆ. ப
இணையத்தளம்தமிழ்நாடு தலைமை செயலகம்

லட்சுமி பிரானேஷ் (Lakshmi Pranesh) என்பவர் ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். 1967-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர். இவர் தமிழகத்தின்‌ முதல்‌ பெண்‌ தலைமைச்செயலாளரும் ஆவார். [1][2]

அரசுப் பணிகள்[தொகு]

1967 ஆம் ஆண்டு தமிழக பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைகளுக்கான கூடுதல் செயலாளராக பணியாற்றிய இவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த சுகவனேஸ்வர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தின் 35-வது தலைமைச் செயலாளராக 2 டிசம்பர் 2002 அன்று பொறுப்பேற்றார். 2005-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_பிரானேஷ்&oldid=3855505" இலிருந்து மீள்விக்கப்பட்டது