லட்சுமி அகர்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லட்சுமி அகர்வால்
Laxmi of India (12935659283).jpg
லட்சுமி வாஷிங்டன் விருது பெறும் போது.
பிறப்பு1 ஜூன் 1990
புது தில்லி
துணைவர்அலோக் தீக்ஷித்
பிள்ளைகள்பிகு (மகள்)

லட்சுமி அகர்வால் (Laxmi Agarwal) ( 1 ஜூன் 1990) அமிலத் தாக்குதலை எதிர்த்து பிரசாரம் செய்வதும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் உள்ளார்.[1]அமிலத் தாக்குதலில் தப்பிப் பிழைத்த இவர் இது போன்று பாதிக்கப்பட்டவர்களுக்காக பேசி வருகிறார். 2005 இல் குட்டா, மற்றும் அவனது தோழன் நீம்கான் இருவரும் சேர்ந்து இவர் மீது தாக்குதல் நடத்தினர். இவருக்கு அப்போது வயது 15 மட்டுமே.[2][3] ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற நாளிழிதலில் இவர் மீது நடந்த அமிலத் தாக்குதல் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக தொடராக வெளியிட்டது.[4] அமிலத் தாக்குதலை தடுப்பதற்கும், சட்ட விரோத அமில விற்பனையை தடுப்பதற்கும் பொதுமக்களில் 27,000 பேரிடம் கையெழுத்தினைப் பெற்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.இவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அமில விற்பனையை கண்காணிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்திரவிட்டது. இந்தியநாடாளுமன்றமும் அமில விற்பனைக்கெதிராக வழக்கினை எளிமையாக்கியது.

அமிலத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சான்வ் என்ற நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார்.[5] உலகத்தின் தைரியமான பெண்களுக்கு வழங்கப்படும் விருதினை 2014 இல் அமெரிக்க அதிபரின் மனைவி மிசெல் ஒபாமாவிடமிருந்து பெற்றுக் பெற்றுள்ளார்.என்டிடிவி என்ற தொலைக்காட்சி இவரை சிறந்த இந்தியராக தேர்வு செய்தது.[6]

இளமைக் காலம்[தொகு]

புது தில்லியில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்துள்ளார்.[3] தனது 15வது வயதில் அமிலத் தாக்குதலுக்குள்ளானார்.

தொழில்[தொகு]

அமில தாக்குதலுக்கெதிராக தனது பிரசாரத்தைத் தொடங்கினார். ஆரம்ப காலத்தில் பிரசார, ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி, பின்னர், உலகளவில் குரலெழுப்புவராகவும் அறியப்பட்டார். இப்பணிக்காக, பல்வேறு அமைப்புகள் இவருக்கு பல விருதுகளை வழங்கியுள்ளது. தற்போது தனியே லட்சுமி அமில விற்பனையை தடுக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். 2014 ஜூன் மதம், உதான் மற்றும் நியூ எக்ஸ்பிரஸ் போன்ற தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை வழங்க ஆரம்பித்தார்.[6]

குடும்ப வாழ்க்கை[தொகு]

அலோக் தீக்சித் என்ற சமூக செயல்பாட்டாளரை காதலித்து 2014 ஜனவரியில் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.[4][7][8] தற்போது அவர்களுக்கு பிகு என்றொரு மகளுண்டு.

போராட்டம்[தொகு]

தன்னைப் போலவே பாதக்கப்பட்டவர்கருக்கு உடனடி தீர்ப்பு கிடைக்க வேண்டுமென்பதற்காக உண்ணாநிலைப் போராட்டம் இருந்துள்ளார்..[9] தான் செய்யும் பணி சார்ந்து கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_அகர்வால்&oldid=2701684" இருந்து மீள்விக்கப்பட்டது