லட்சுமிபுரம் (தேனி மாவட்டம்)
தோற்றம்
லட்சுமிபுரம்
Lakshmipuram எல்.புதுப்பட்டி | |
|---|---|
கிராமம் | |
மேற்கு தொடர்ச்சி மலையின் மீதிருந்து லட்சுமிபுரம் | |
| ஆள்கூறுகள்: 10°4′38.55″N 77°31′11.41″E / 10.0773750°N 77.5198361°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தேனி |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 10,000+ |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
லட்சுமிபுரம் (Lakshmipuram) என்பது இந்திய நாட்டின் தமிழ்நாடு மாநிலத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் அமைந்திருக்கும் ஒரு கிராமம் ஆகும்[1] மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தேனி நகரிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், பெரியகுளத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் தேசிய நெடுஞ்சாலை எண் 183 இல் இக்கிராம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் மக்கள் தொகை 10000 மக்களுக்கும் அதிகமாகும்.
வடக்கில் கொடைக்கானல் தாலுகா, தெற்கே தேனி தாலுகா, கிழக்கே நிலக்கோட்டை தாலுகா போன்றவை லட்சுமிபுரத்தைச் சூழ்ந்துள்ளன. மாநிலத்தின் தலைநகரான சென்னையிலிருந்து 486 கி.மீ. தொலைவில் இக்கிராமப் பஞ்சாயத்து அமைந்துள்ளது.