லங்கேஷ் பத்திரிகே
![]() | |
![]() | |
வகை | வார இதழ் |
---|---|
வடிவம் | அச்சு, இணையம் |
நிறுவுனர்(கள்) | பி. இலங்கேசு |
வெளியீட்டாளர் | இந்திரஜித் லங்கேஸ் |
ஆசிரியர் | பி. டி. லலிதா நாயக், வைதேகி பி. எம். ரஷீத், சாரா அபுபக்கர், பானு முஷ்டாக் |
நிறுவியது | 1980 |
அரசியல் சார்பு | Left |
மொழி | கன்னடம் |
தலைமையகம் | பெங்களூர், கருநாடகம் |
இணையத்தளம் | lankeshpatrike |
நாடு | இந்தியா |
லங்கேஷ் பத்திரிகே (Lankesh Patrike) என்பது கருநாடகத்தின் பெங்களூரிலிருந்து வெளியாகும் ஒரு கன்னட வார இதழாகும்.
மகாத்மா காந்தி வெளியிட்ட ஹரிஜன் என்ற செய்தித்தாளின் மாதிரியில், 1980 ஆம் ஆண்டு பி. லங்கேஷ் இந்த வார இதழைத் தொடங்கினார். வார இதழ் அதன் கொள்கைகளுக்கு உண்மையாக இருந்து ஒரு விளம்பரத்தை கூட வெளியிடாடாமல், எந்த விளம்பர வருவாயையும் ஈட்டாமல், கடந்த 37 ஆண்டுகளாக தன் வாசகர்களின் சந்தாவினால் மட்டுமே நீடித்து வருகிறது.
இந்த வார இதழ் இந்திய சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள், தலித்துகள், பெண்கள், விளிம்பிநிலை மக்கள் ஆகியோருக்கான ஒரு தளமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டுள்ளது. இந்தப் பிரிவினரின் குரலாக வளர்ந்து இதழியில் துறையில் ஒரு வணிக குறியீடாக ஆனது. ரைதர சலுவலி (விவசாயிகள் போராட்டம்), தலித் இயக்கம் மற்றும் இதழின் நிறுவனர் பி. லங்கேஷ் தொடங்கிய கோகாக் இயக்கம் ஆகியவற்றில் இதழ் முக்கிய பங்கு வகித்தது. லங்கேஷ் 1980 ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை இதழை வழிநடத்தினார். இதழ் அதன் உச்சத்தில், வாராந்திரம் 2.5 மில்லியன் வாசகர்களைக் கொண்டிருந்தது, 4.5 இலட்சம் பிரதிகள் விற்பனை ஆனது.
லங்கேஷ் பத்திரிகே கன்னட இலக்கிய உலகிற்கு பல புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது. அவர்களில் பி. டி. லலிதா நாயக், வைதேகி பி. எம். ரஷீத், சாரா அபுபக்கர், பானு முஷ்டாக், ஆகியோர் பின்னர் எழுத்தாளர்களாக பாராட்டுகளைப் பெற்றனர்.
1980–2000: பி. லங்கேஷ்
[தொகு]சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் பி. லங்கேஷ் 1980 முதல் 2000 ஆம் ஆண்டு தான் இறக்கும் வரை லங்கேஷ் பத்திரிக்கையின் நிறுவனர் மற்றும் ஆசிரியராக இருந்தார். 1980 ஆம் ஆண்டு பெங்களூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில உதவிப் பேராசிரியராக இருந்த லங்கேஷ் தனது வேலையை விட்டுவிட்டு, கன்னடத்தின் முதல் சிற்றிதழான லங்கேஷ் பத்திரிகேயைத் தொடங்கினார், [1] இது கன்னட பண்பாடு, அரசியல் போன்றவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. [ மேற்கோள் தேவை ]
தீவிர சோசலிஸ்ட்டும், லோகியாவாதியுமான லங்கேஷ், தன் லங்கேஷ் பத்திரிக்கையைத் தொடங்குவதற்கு முன்பு, தன் சோசலிச நண்பர்களான ராம்தாஸ், தேஜஸ்வியுடன் சேர்ந்து, கருநாடகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தங்கள் புதிய சோசலிசக் கட்சிக்கு வாக்குசேகரிக்க மக்களைத் திரட்டினார். இந்தப் பயணத்தில்தான், கருநாடகத்தின் தொலைதூரப் பகுதிகளுக்கு சென்ற அவர் , ஏழைகள் மற்றும் தலித்துகளின் துயரங்களைப் புரிந்துகொள்ளக் கண் திறப்பாக அமைந்தது, மேலும் ஒரு எழுத்தாளராகவும், அறிவுஜீவியாகவும் சமூகத்தின் மீதான தனது பொறுப்பை உணர வைத்தது என்று அவர் தனது தலையங்கங்களில் ஒன்றில் நினைவு கூர்ந்தார்.[சான்று தேவை][ மேற்கோள் தேவை ]
இதையே இந்த வார இதழ் தனது பணியாகக் கொண்டது. 25 ஆண்டுகளாக இதழுடன் தொடர்புடைய லங்கேசின் மகன் இந்திரஜித் லங்கேஸ் நிருவாக ஆசிரியராக கொண்டு இயங்கி வந்தது. [ மேற்கோள் தேவை ]
பி. லங்கேஷ் இறந்த பிறகு
[தொகு]பி. லங்கேஷின் மரணத்திற்குப் பிறகு, அவரது மகன் இந்திரஜித் லங்கேஷ் இதழின் உரிமையாளராகவும், நிருவாக ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் இருந்தார். அதே நேரத்தில் அவரது மகள் கௌரி லங்கேஷ் இதழின் ஆசிரியர் பெறுப்பை ஏற்றிருந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு, கௌரிக்கும் இந்திரஜித்க்கும் இடையே இதழின் சித்தாந்தம் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. 2005 பெப்ரவரியில், உடன்பிறப்புகள் ஒருவருக்கொருவர் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளைக் கூறிக்கொண்டனர். கௌரி இதழ் மூலம் நக்சலிசத்தை ஊக்குவித்ததாக இந்திரஜித் குற்றம் சாட்டினார் கௌரி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து , இந்திரஜித் தனது சமூக செயல்பாட்டை எதிர்த்ததாகக் கூறினார்.[2] பின்னர் லங்கேஷ் பத்திரிகேயை விட்டு வெளியேறிய கௌரி, தன் சகோதரர் தன்னை மிரட்டியதாக புகார் அளித்தார். விசாரணையின் பின்னர் இது ஒரு தவறான குற்றச்சாட்டு என்று கூறி காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டனர். இந்திரஜித் லங்கேசுக்கு ஆதரவாக நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது. கௌரி லங்கேஷ் பத்திரிகே என்ற பெயரில் தானே சொந்தமாக கன்னட வார இதழைத் தொடங்கினார். இந்துசமயத்திற்கு எதிராக கருத்துகளைக் கூறிவருவதாக கூறி 2017, செப்டம்பர், 5, அன்று, கௌரி, ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டில், அடையாளம் தெரியாத தாக்குதல்தாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முன்பே அவரது கருத்துக்களுக்காக பல கொலை மிரட்டல்கள் வந்தன. [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Aditi De (2008). Multiple City: Writings on Bangalore. Penguin Books India. p. 83. ISBN 978-0-14-310025-6. Retrieved 29 October 2016.
- ↑ "'Lankesh Patrike' family splits". The Times of India. 15 February 2005. http://timesofindia.indiatimes.com/city/bengaluru/Lankesh-Patrike-family-splits/articleshow/1022189.cms.
- ↑ "Activist Gauri Lankesh shot dead at her Bengaluru home". The Economic Times. 5 September 2017. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/senior-journalist-gauri-lankesh-shot-dead-in-bengaluru/articleshow/60381538.cms.