லக் பள்ளத்தாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லக் பள்ளத்தாக்கு (Lug Valley) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் ஒரு பள்ளத்தாக்கு ஆகும். இமாச்சலப்பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் உள்ள இமயமலைப் பகுதியில் இப்பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.

கடந்த 150 வருடங்களாக இமயமலைப் பகுதியில் வசிக்கும் மக்கள் காடுகளிலிலிருந்து மரங்களை எடுக்கும் வன ஒப்பந்தகாரர்களாக உள்ளனர். இன்றும் பல முக்கியமான வன ஒப்பந்தகாரர்கள் இமயமலைப் பகுதியிலுள்ள லக் பள்ளத்தாக்கில் காணப்படுகின்றனர்.[1] கம்பி வடங்கள் மற்றும் தள்ளுவடங்களைப் பயன்படுத்தி மரச்சாமான்களை எடுத்துச் செல்லும் வழக்கம் குல்லு மாவட்டத்திலுள்ள இப்பள்ளத்தாக்கில்தான் தொடங்கியது. [1]. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இமாசலப் பிரதேச காடுகளில் கிடைக்கும் மரத்துண்டுகளைக் கொண்டு செல்ல பிரித்தானிய வனத்துறையினர் இக்கருவிகளைப் பயன்படுத்தினர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "History of Ropeways in Kullu". Archived from the original on 23 May 2003. பார்க்கப்பட்ட நாள் 2006-12-24.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்_பள்ளத்தாக்கு&oldid=3777146" இலிருந்து மீள்விக்கப்பட்டது