லக்ஷ்மி (2018 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லக்ஷ்மி
சுவரிதழ்
இயக்கம்ஏ. எல். விஜய்
தயாரிப்புபிரதிக் சக்ரவர்தி
சுருதி நல்லப்பா
ஆர். ரவீந்திரன்
கதைஏ. எல். விஜய்
திரைக்கதைஏ. எல் விஜய்
இசைசாம் சிஎஸ்
நடிப்புபிரபு தேவா
தீத்யா பாண்டே
ஐஸ்வர்யா ராஜேஷ்
சல்மான் யூசுப் கான்
ஒளிப்பதிவுநிரவ் சா
படத்தொகுப்புஅந்தோனி
கலையகம்பிரமோத் பிலிம்ஸ்
டிரண்ட் ஆர்ட்ஸ்
வெளியீடுஆகத்து 24, 2018 (2018-08-24)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

லக்ஷ்மி 2018 இல் நடனத்தை முதன்மைப்படுத்தி வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். ஏ. எல் விஜய் எழுதி இயக்கியிருக்கின்றார். பிரபு தேவா, தித்யா பாண்டே, ஐஸ்வர்யா ராஜேஸ் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சல்மான் யூசுப் கான் மற்றும் கருணாகரன் துணை நடிகர்களாக நடித்துள்ளனர். பிரடிக் சக்ரவர்தி, சுருதி நல்லய்யா மற்றும் ஆர். ரவீந்திரனின் தயாரிப்பில் வெளியானது. இத் திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கின்றார். நிரவ் சா ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருக்கின்றார். 2018 ஆம் ஆண்டு ஆகத்து 24 இல் வரலக்ஷ்மி விரத நாளில் இத்திரைப்படம் வெளிவந்தது.[1]

கதை[தொகு]

லக்ஷ்மி தாயுடன் வசிக்கும் நடனத்தை உயர் மூச்சாக கொண்ட பத்து வயது சிறுமி. லக்ஷ்மியின தாய் நந்தனி (ஐஸ்வர்யா ராஜேஸ்) நடனத்தை வெறுப்பவர். லக்ஷ்மி பாடசாலைக்கு அருகில் கஃபேயில் உள்ள விஜய கிருஷ்ணா (விகே- பிரபுதேவா) உடன் நட்பாகின்றார. லக்ஷ்மியின் நடனத் திறமை விகே கவரப்படுகின்றார். விகேயின் அன்பையும் அனுதாபத்தையும் லக்ஷ்மி பெறுகின்றார். பிரய்ட் ஒப் லைப் இந்தியா நடன நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதே லக்ஷ்மியின் இலட்சியம். சென்னை நடன அகாதமியில் நந்தனிக்கு தெரியாமல் விகேயை தந்தை என கூறி விகேயின் உதவியுடன் இணைகின்றார். ஒரு கட்டத்தில் விகேயிற்கு அவரது முன்னாள் காதலி நந்தனியின் மகள் லக்ஷ்மி என்பது தெரிய வருகின்றது. விகே 2005 இல் பிரய்ட் ஒப் லைப் இந்தியா நடன நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளர் என்பதும் விபத்தால் இறுதி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போகின்றது. லக்ஷ்மி மற்றும் விகேயின் கனவு எவ்வாறு தடைகளை கடந்து நிறைவேறுகின்றதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்[தொகு]

 • பிரபு தேவா - விஜய் கிருஷ்ணா என்கிற “விகே”
 • தீத்யா பாண்டே - லக்ஷ்மி
 • ஐஸ்வர்யா ராஜேஸ் - நந்தனி (லக்ஷ்மியின் தாய்)
 • சல்மான் யூசுப் கான் - யூசுப் கான்
 • கருணாகரன் - அழகு
 • கோவை சரளா - சரஸ்வதி, லக்ஷ்மியின் பாடசாலை அதிபர்
 • சாம்ஸ் - பேருந்து நடத்துனர்
 • அக்சத் சிங் - ஆர்னோல்ட் லக்ஷ்மியின் நண்பன்
 • சோபியா - லக்ஷ்மியின் நடன பயிற்றுவிப்பாளர்
 • ஜீத் தாஸ் - சோபியாவின் மகன்
 • சாம் பால் - சேனல் 99 இன் தலைவர்

தயாரிப்பு[தொகு]

2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஏ. எல் விஜய் மற்றும் பிரபு தேவா புதிய திரைப்படத்தில் இணைவதாக தகவல் வெளியானது. இத்திரைப்படம் தேவி (2016) திரைப்படத்தின் தொடர்ச்சியில்லை என மறுத்து அறிக்கைகள் வெளியாகின. 22 செப்டம்பர் 2017 திரைப்பட பணிகள் ஆரம்பித்தன. ஐஸ்வர்யா ராஜேஸ் முக்கிய கதா பாத்திரத்தில் நடிப்பதற்கும், நிரவ் சா ஒளிப்பதிவாளராகவும், சாம் சி. எஸ் மற்றும் அந்தோனி முறையே இசையமைப்பாளராகவும், படத்தொகுப்பாளராகவும் ஒப்பந்தமானார்கள். டரென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரனினதும், பிரமொத் பிலிம்ஸ் சுருதி நல்லப்பாவினதும் தயாரிப்பில் வெளிவந்தது.

இத்திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தீத்யா பாண்டே முன்னணி பாத்திரமேற்றுள்ளார். இவர் இந்தி தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியான சூப்பர் டான்ஸ் நிகழ்ச்சியின் வாகையாளர் ஆவார். மேலும் அக்சத் சிங், ஜீத் தாஸ் ஆகிய சிறுவர்களும் நடித்துள்ளனர்.[2][3]

இத்திரைப்பட பணிகள் 2018 பெப்ரவரி 6 பூர்த்தியாகின. திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் பிரபு தேவாவின் ஓவியத்தை அவருக்கு பரிசளித்தனர்.[4]

வெளியீடு[தொகு]

12 கோடி ரூபாய் செலவில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.[5] 24 ஆகத்து 2018 இல் இத்திரைப்படம் வெளியானது.

ஒலிப்பதிவு[தொகு]

விக்ரம் வேதா திரைப்படத்திற்கு இசையமைத்த சாம் சி. எஸ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மதன் கார்க்கியின் ஏழு பாடல்களுக்கும் பாடலாசிரியராக பணி புரிந்திருக்கின்றார்.

லக்ஷ்மி திரைப்பட பாடல்கள்
இல. பாடல் பாடகர் பாடல் நீளம்
1. மொரக்கா மட்ராக்கா உத்ரா உன்னிகிருஷ்ணா 03:05
2. ஆலா ஆலா ஜி. வி. பிரகாஷ் குமார், சைந்தவி 03:12
3. பப்பர பப்பா பிரினிதி, ரியாஸ், ஶ்ரீ விஷ்ணு, பிரனவ் 02:46
4. ட்ரீமி செல்லம்மா சைந்தவி 03:53
5. நில்லாதே நில்லாதே சத்ய பிரகாஷ் 03:30
6. இறைவா இறைவா சாம் சிஎஸ் 04:19
7. தி ரிதம் ஒப் தீம்ஸ் ஜசின் ஜார்ஜ் 04:02

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]