லக்னோ மாபெரும் விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லக்னோ மாபெரும் விழா
வகைகலை மற்றும் கலாச்சாரம்
நாள்வருடத்தில் 10 நாட்கள்
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்1976 முதல் தற்போது வரை
வலைத்தளம்
lucknowmahotsav.in

லக்னோ மாபெரும் விழா (லக்னோ மஹோத்சவ்), [1] என்பது இந்தியாவின் லக்னோவில் ஒவ்வொரு ஆண்டும் உத்தரபிரதேச கலை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தவும், குறிப்பாக லக்னோவின் கங்கா - யமுனா 'தெஹ்சீப்' சுற்றுலாவை மேம்படுத்தவும் ஏற்பாடு செய்யப்படும் ஒரு இந்திய கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சியாகும். கைவினைஞர்களுக்கு ஊக்கமளிப்பதே பண்பாட்டுக் கூட்டமைப்பின் நோக்கங்களில் ஒன்றாகும். நாடு முழுவதிலுமிருந்து கைவினைஞர்கள் தங்கள் தலைசிறந்த படைப்புகளை இந்த திருவிழாவிற்கு கொண்டு வந்து கடைகளில் கண்காட்சிக்கு வைத்து மகிழ்விக்கின்றனர். வண்ணமயமான ஊர்வலங்கள், பாரம்பரிய நாடகங்கள், லக்னோ கரானா, சாரங்கி பாணியில் ஆடப்படும் கதக் நடனங்கள் மற்றும் சித்தார் இசை நிகழ்ச்சிகள், கஸல்கள், கவாலிகள் மற்றும் தும்ரி ஆகிய கலை நிகழ்ச்சிகள் திருவிழா நடைபெறும் பத்து நாட்களும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்குகின்றன. எக்கா பந்தயம், காத்தாடி பறக்கவிடுதல், சேவல் சண்டை மற்றும் பிற பழங்குடி கிராம விளையாட்டுகள் போன்ற அற்புதமான நிகழ்வுகள் கடந்த கால நவாபி நாட்களின் சூழலை மீண்டும் நிறுவுகின்றன.

வரலாறு[தொகு]

தெற்காசியர்கள், 1975-76 ஆம் ஆண்டை சுற்றுலா ஆண்டாக அனுசரித்து கொண்டாட ஏற்பாடு செய்தனர். இந்த சந்தர்ப்பத்தில், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஒரு நோக்கமாகவும், தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்காகவும் லக்னோ மஹோத்சவின் கலை, கலாச்சாரம் சார்ந்த கொண்டாட்ட விழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டது. ஒரு சில ஆண்டுகளைத் தவிர, லக்னோ மஹோத்சவ் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது, டோங்கா பந்தயங்கள் முதல் பழங்கால வாகனங்கள் கண்காட்சி வரை பல காட்சிகளும் நிகழ்வுகளும் கடந்த கால பெருமைகளை நினைவூட்டுகின்றன. இது பேகம் ஹஸ்ரத்மஹால் பூங்காவில் பெரும்பாலான நேரம் நடைபெறும். [2]

உணவு வகைகள்[தொகு]

கேசரியா தூத், கபாப்-பரோட்டாக்கள் மற்றும் உமிழ்நீரை சொட்ட வைக்கும் சுவையான பாரம்பரிய பிற அசைவ உணவுகள் உட்பட பலவிதமான உணவு வகைகள் இந்த திருவிழாவில் கிடைப்பதால், மஹோத்சவ் உணவு பிரியர்களுக்கு மிகவும் ஏற்றதாகும்.

பொழுதுபோக்கு[தொகு]

10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா லக்னோவின் பொழுதுபோக்கிற்கு சிறந்த ஒரு உதாரணமாகும். லக்னோவின் சிறந்த, பாரம்பரிய பாடகர்கள், ஷாயர்கள், கவிஞர்கள் மற்றும் பலர் அற்புதமான நிகழ்ச்சிகளால் விழா மேடையை தினமும் அலங்கரிக்கிறார்கள். மேலும், தேசிய, மாநில விருது பெற்றவர்கள், கைவினைஞர்கள், கைவினைக் கண்காட்சியில், தங்கள் கடைகளில் அவர்களின் சிறந்த கலைப்படைப்புகளை காட்சிப்படுத்தி வருகின்றனர். இதனால் பங்குபெறும் சுற்றுலாவாசிகளுக்கு அந்த நாள் முழுமையானதாக அமைய உதவும். இந்த 10 நாட்களில், அரங்கம் முழுவதும் பல்வேறு சவாரிகள் மற்றும் பிற கவிதை / கலாச்சார நிகழ்வுகளை அனுபவிக்கும் மக்களால் நிரம்பியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lucknow Mahotsav". www.lucknowmahotsav.in. Archived from the original on 2018-11-15. பார்க்கப்பட்ட நாள் 2018-11-15.
  2. "லக்னோ மஹோத்சவ்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்னோ_மாபெரும்_விழா&oldid=3702574" இலிருந்து மீள்விக்கப்பட்டது