லக்கி அடர்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

லக்கி அடர்காடு அல்லது லக்ஹி அடர்காடு (Lakhi Jungle) மற்றும் முழுமையான லக்கி அடர்ந்த காடு கல்சா (Lakhi Jungle Khalsa) எனும் இது, வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள பட்டிண்டா நகரத்திலிருந்து 15- கிலோமீட்டர் தொலைவில் சிறீ முக்த்சர் சாகிபு (Sri Muktsar Sahib) செல்லும் வழியில் அமைந்துள்ளது.[1]

ஒரு பழைய குருத்துவாராவை உள்ளடக்கியிருந்த அந்த வனத்தில், சீக்கிய மதத்தின் நிறுவனரும், மற்றும் பத்து சீக்கிய குருக்களுள் முதல் குருவுமான குரு நானக் என்பவர், 'சிறீ சப்புசி சாகிப்பின்' (Shri Japuji Sahib) ஒரு இலட்சம் (100,000) புனித பாதைகளை ஜபித்ததாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பூரணை (முழுமதி) சமயத்தில் சிறீ சப்புசி சாகிப்பின் மந்திரத்தை ஜபித்து, இங்கிருக்கும் நீர்நிலையில் குளிப்பது வேண்டுதல்களை நிறைவேற்றுவதாக கருதப்படுகிறது. மேலும், அம்ரீத் தீர்த்தத்தில் குளிப்பது பிணிகளை குணப்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. பின்னாளில், சீக்கிய மத நம்பிக்கையின் ஒன்பதாம் நானக் குருவான குரு தேக் பகதூர் என்பவரும், பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் என்பவரும் இந்த லக்கி அடர்காட்டில் உள்ள பழம்பெரும் குருத்வாராவை பார்வையிட்டு சென்றதாக சொல்லப்படுகிறது.[2]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Lakhi Jungle, Bathinda.". www.nativeplanet.com (© 2016). பார்த்த நாள் 2016-07-16.
  2. "Lakhi Jungle Khalsa.". www.sikhiwiki.org (4 May 2013, at 13:10). பார்த்த நாள் 2016-07-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்கி_அடர்காடு&oldid=2089959" இருந்து மீள்விக்கப்பட்டது