லகிரு மதுசங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லகிரு மதுசங்க
Lahiru Madushanka
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லகிரு தில்சான் மதுசங்க
பிறப்பு12 செப்டம்பர் 1992 (1992-09-12) (அகவை 31)
எலகெர, பொலன்னறுவை, இலங்கை
பட்டப்பெயர்லகியா
மட்டையாட்ட நடைவடக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர-விரைவு
பங்குபல்துறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 179)4 பெப்ரவரி 2017 எ தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாப30 சூன் 2017 எ சிம்பாப்வே
இ20ப அறிமுகம் (தொப்பி 81)6 செப்டம்பர் 2019 எ நியூசிலாந்து
கடைசி இ20ப9 அக்டோபர் 2019 எ பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2017-கொழும்பு
2015-2016புளூம்ஃபீல்ட்
2013ஊவா நெக்ஸ்டு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா.ப இ20ப மு.த ப.அ
ஆட்டங்கள் 4 2 55 58
ஓட்டங்கள் 14 21 1,886 661
மட்டையாட்ட சராசரி 4.66 10.50 30.91 24.48
100கள்/50கள் 0/0 0/0 2/10 0/0
அதியுயர் ஓட்டம் 7 20 164 49*
வீசிய பந்துகள் 144 24 4,576 1,538
வீழ்த்தல்கள் 4 0 83 48
பந்துவீச்சு சராசரி 43.00 - 30.78 27.77
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/70 0 6/51 3/8
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 0/– 34/– 23/–
மூலம்: Cricinfo, 9 அக்டோபர் 2019

லகிரு தில்சன் மதுசங்க (Lahiru Dilshan Madushanka, சிங்களம்: ළහිරු මධුෂංක; பிறப்பு: செப்டம்பர் 12, 1992) பொதுவாக லகிரு மதுசங்க என அறியப்படும் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார் .இவர் இலங்கை தேசிய துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி மற்றும் பன்னாட்டு இருபது 20 ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் வலது கை மட்டையாளர் ஆன இவர் வலது கை மித வேகப்பந்து வீச்சாளர் ஆவார் . இவர் பொலன்னருவாவின் எலஹெராவில் பிறந்தார். அவர் மாத்தலே செயின்ட் தாமஸ் கல்லூரியின் பழைய தோமியன் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் எலஹர மஹா வித்யாலயா பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பயின்றார்.[1] அங்கு தரம் 5 கல்வியினை தேர்ச்சி பெற்ற பின்பு மாத்தலே செயின்ட் தாமஸ் கல்லூரியில் பட்டம் படிக்கச் சென்றார். அங்கு தனது துடுப்பாட்ட திறனை சிறப்பாக வெளிப்படுத்தினார் .பின்பு 19 வயதிற்குட்பட்ட இலங்கைத் துடுப்பாட்ட அணியில் தேர்வானார் .அதன்பின் 19 வயதிற்குட்பட்ட இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் மட்டையாட்டத்தில் 63 ஓட்டங்களை எடுத்தார். பின்பு பந்துவீச்சில் 17 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து நான்கு இலக்குகளைக் கைப்பற்றினார் ஆனால் அந்தப் போட்டியில் 5 ஓட்டங்களில் இந்திய துடுப்பாட்ட அணி வெற்றி பெற்றது . பின்பு 19 வயதிற்குட்பட்ட ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களை எடுத்து அணியின் ஓட்டம் 225 ஆக உதவினார் .இந்த போட்டியில் இலங்கைத் துடுப்பாட்ட அணி 76 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[2][3]

சர்வதேச போட்டிகள்[தொகு]

ஜனவரி 2017 இல் அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இலங்கையின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றார்.[4] இவர் பிப்ரவரி 4, 2017 அன்று தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கின் வாண்டரர்ஸ் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அவர் மட்டை ஆட்டத்தில் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார், ஆனால் தனது முதல் ஓவரில் முதல் சர்வதேச இலக்காக ஃபாஃப் டு பிளெசிஸை 24 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார்.[5] இந்தத் தொடரில், மதுசங்கா மூன்று ஆட்டங்களில் மூன்று முறைகளிலும் டு பிளெசிஸின் இலக்கினைக் கைப்பற்றினார்.

அவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அனிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரில் 22 வீரர்களுடன் ஆரம்ப அணியில் சேர்க்கப்பட்டார்.[6] இருப்பினும், அவர் தொடருக்கான இறுதி 15 வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை .[7] ஆகஸ்ட் 2019 இல், நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடருக்கான இலங்கையின் இருபது -20 சர்வதேச அணியில் அவர் இடம் பெற்றார்.[8] அவர் செப்டம்பர் 6, 2019 அன்று நியூசிலாந்திற்கு எதிராக இலங்கைக்காக பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்த போட்டியில் அவர் 20 ஓட்டங்கள் எடுத்தார். இந்த போட்டியில் இலங்கை வேகப் பந்துவீச்சாளர் மலிங்கா 4 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 இலக்குகளை கைப்பற்றியதன் மூலம் இலங்கைத் துடுப்பாட்ட அணி 37 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[9]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லகிரு_மதுசங்கா&oldid=2933471" இருந்து மீள்விக்கப்பட்டது