ர. பிரஞ்ஞானந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரஞ்ஞானந்தா ரமேஷ்பாபு (2017)

பிரஞ்ஞானந்தா ரமேஷ்பாபு (பி. 10 ஆகஸ்ட் 2005[1]) ஓர் இந்திய சதுரங்க வீரர். சென்னையில் பிறந்த சிறுவர் பிரஞ்ஞானந்தா 2013இல் உலக இளைய சதுரங்க போட்டியில் 8 வயது பிரிவில் வென்றுள்ளார். 2016 இல் , தனது 10 வயது 10 மாதம் 19 நாட்களில் , வரலாற்றில் மிக இளைய அனைத்துலக சதுரங்க மாஸ்டரானார்(International Master).[2] .ஹங்கேரி நாட்டின் பிரபல செஸ் வீராங்கனை ஜூடிட் போல்காரின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்து இச்சாதனையைப் புரிந்தார் .23 சூன் 2018 அன்று இத்தாலி நாட்டில் நடைபெற்ற இளையோர்க்கான சதுரங்கப் போட்டியில், கிராண்ட் மாஸ்டர் மோரோனி லூக்காவை வீழ்த்தி, தமது 12 ஆண்டு, 10 மாதம் அகவையில் சேர்ஜே கார்ஜக்கினுக்குப் பின் இளையோர்களுக்கான கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ர._பிரஞ்ஞானந்தா&oldid=3019069" இருந்து மீள்விக்கப்பட்டது