ரௌல்ட் விதி
Appearance
ஒரு கரைப்பொருளை கரைப்பானில் கரைத்தால் நீர்மத்தின் ஆவி அழுத்தம் குறைகிறது. இத்தகைய ஆவி அழுத்தக் குறைவு கரைப்பானின் மூலக்கூறு எடை கரைப்பொருளின் மூலக்கூறு எடை ஆகியவற்றை தொடர்புபடுத்தி 1887 ஆம் ஆண்டு ரெளல்ட் என்ற பிரான்சு நாட்டு வேதியலார் விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு விதியை வெளியிட்டார். கரைசலின் செறிவைச் சார்ந்து நீர்மத்தின் ஆவி அழுத்தக் குறைவு ஏற்படுகிறது. செறிவு கிராம் மூலக்கூறு அளவில் குறிப்பிடப்படுகிறது. சார்பு ஆவி அழுத்தக் குறைவின் அளவு கரைப்பொருளின் கிராம் மூலக்கூறு எண்ணிக்கைக்கும் கரைசலை உருவாக்கும் கரைப்பான் கரைப்பொருள் ஆகியவற்றின் கூட்டு மொத்த கிராம் மூலக்கூறு எண்ணிக்கைக்கும் உள்ள விகிதத்திற்கு சமம் என்பதே ரெளல்ட் விதி எனப்படும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அறிவியல் களஞ்சியம் - தொகுதி 18 - தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு எண் 344 - நவம்பர் 2009 - பக்க எண் 209.