ரோ விருச்சிக விண்மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோ விருச்சிக விண்மீன்
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை விருச்சிக விண்மீன் குழாம்
வல எழுச்சிக் கோணம் 15h 56m 53.1s
நடுவரை விலக்கம் −29° 12' 51"
தோற்ற ஒளிப் பொலிவு (V)+3.87
Distance409 ± 45 ஒஆ
(125 ± 14 பாசெ)
Spectral typeB2IV-V

ரோ விருச்சிக விண்மீன் (Rho Scorpii, ρ Sco, ρ Scorpii) என்பது விருச்சிக விண்மீன் குழாத்திலுள்ள ஒரு இரும விண்மீன் ஆகும். இது தோராயமாக புவியிலிருந்து 409 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. இதில் முதன்மை விண்மீன் ரோ விருச்சிக விண்மீன் எ. இது ஒரு நீல-வெள்ளை நிற B வகை துணை பெருவிண்மீன். இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் +3.87. இதன் துணை விண்மீன் ரோ விருச்சிக விண்மீன் பி இன் தோற்ற ஒளிப்பொலிவெண் +12.8