ரோஸ் வெங்கடேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரோஸ் வெங்கடேசன் இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் உரையாடல் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக விளங்கியவர். இவரது உரைஆடல் நிகழ்ச்சியான இப்படிக்கு ரோஸ் சமூக வழக்கங்கள், மனத்தடைகள், பண்பாடு மற்றும் வேறுபாட்டளர்கள் என சமகாலத்தில் நிலவும் சமூகப் பிரச்சினைகளை கையாண்டது.

தனி வாழ்க்கை[தொகு]

1980இல் பிறந்து ரமேஷ் வெங்கடேசன் என்ற பெயரில் வளர்க்கப்பட்ட ரோஸ் தனது ஐந்தாவது அகவையிலேயே தன்னிடம் பெண்மைத்தனம் மிகுந்திருப்பதை உணர்ந்திருந்தார். இருபது அகவைகளில் ஒரு பெண்ணாகவே உடை உடுத்துவதை விரும்பினார். இவரது பாலின விருப்பை அறிந்த பெற்றோர்கள் மிகுந்த வருத்தமடைந்தனர்.

இவர் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து கல்வியை முடித்து திரும்பிய பிறகும் இவருக்கு திருமணம் செய்வித்தால் இவர் மனம் மாறும் என முயற்சித்தனர். இறுதியில் இவரை இவராக ஏற்றுக்கொள்ள துவங்கினர். சில குடும்பத்தினர் இன்னமும் இவரது மாறிய பால் அடையாளத்தை ஏற்க மறுத்து வருகின்றனர். [1][2]

கல்வி[தொகு]

இவர் தனது இடைநிலைக் கல்வியை சென்னையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிசன் இடைநிலைப் பள்ளி (தெற்கு)இல் 1996 ஆம் ஆண்டு முடித்தார். 1997 - 2001 ஆண்டுக்காலத்தில் சத்தியபாமா பொறியியல் கல்லூரியில் இயந்திரவியலில் பட்டம் பெற்றார். ஐக்கிய அமெரிக்காவின் லூசியானா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவப் பொறியியலில் 2001 முதல் 2003 வரை படித்தார்.[3]

வானொலி அறிவிப்பாளராக[தொகு]

பிக் எஃப்.எம் 92.7 அலைவரிசையில் வாரநாட்களின் மதிய நேரங்களில் ரோசுடன் பேசுங்கள் என்ற நிகழ்ச்சியின் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஸ்_வெங்கடேசன்&oldid=1365973" இருந்து மீள்விக்கப்பட்டது