ரோவர்சு கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2nd Bttln Middlesex Regiment winning the Rovers Cup in 1926

ரோவர்சு கோப்பை (Rovers Cup) என்பது இந்தியாவில் நடத்தப்படும் கால்பந்துப் போட்டியாகும். இப்போட்டி 1891-இல் பிரிட்டிசு கால்பந்து ஆர்வலர்களால் பாம்பேயில், தற்போது மும்பை, தொடங்கப்பட்டது. இது டியூரான்டு கோப்பைக்கு அடுத்தபடியாக மிகப் பழமையான இந்தியக் கால்பந்துப் போட்டியாகவிருந்தது. ஆனால், தற்போது இக்கோப்பைக்கான போட்டிகள் நடத்தப்படுவதில்லை. கடைசியாக 2000-01 பருவத்தில் நடத்தப்பட்டது, அதில் மோகுன் பகன் அணியினர் சர்ச்சில் பிரதர்சு விளையாட்டுக் கழக அணியை 2-0 என்ற இலக்கு கணக்கில் வீழ்த்தி வாகைசூடினர். மேற்கிந்திய கால்பந்து சங்கம் (Western India Football Association-WIFA) இக்கோப்பையை மீண்டும் நடத்துவதற்கான முயற்சிகளை செய்து வருகிறது.[1]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோவர்சு_கோப்பை&oldid=1383874" இருந்து மீள்விக்கப்பட்டது