ரோயிங்
ரோயிங் | |
---|---|
பேரூராட்சி & மாவட்டத் தலைமையிடம் | |
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் ரோயிங் பேரூராட்சியின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 28°8′34″N 95°50′34″E / 28.14278°N 95.84278°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அருணாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | கீழ் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம் |
ஏற்றம் | 390 m (1,280 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 11,389 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 792110 |
ஐஎசுஓ 3166 குறியீடு | [ISO 3166-2:IN |
வாகனப் பதிவு | AR-16 |
கோப்பென் காலநிலை வகைப்பாடு | ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலை |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |

ரோயிங் (Roing), வடகிழக்கு இந்தியாவின்அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கீழ் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். இது அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகருக்கு வடகிழக்கே 336.6 கிலோ மீட்ட ர் தொலைவில் உள்ளது.
போக்குவரத்து
[தொகு]பிரம்மபுத்திரா ஆறு ரோயிங் நகரத்தையும், அசாம் மாநிலத்தின் தின்சுகியா நகரத்தையும் பிரிக்கிறது. கோடைக்காலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதால் இரு நகரங்களுக்கு இடையே போக்குவரத்து தடைபடுகிறது. எனவே இப்பகுதியில் பாயும் பிரம்மபுத்திரா ஆற்றின் மீது பூபென் ஹசாரிகா பாலம் கட்டப்பட்டது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,617 குடும்பங்கள் கொண்ட ரோயிங் நகரத்தின் மக்கள் தொகை 11,389 ஆகும். அதில் 6,064 ஆண்கள் மற்றும் 5,325 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.16%வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 878 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 88.39% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 0% மற்றும் 29.81% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 62.82%, இசுலாமியர் 6.80%, பௌத்தர்கள் 4.83%, கிறித்தவர்கள் 12.00%,மற்றும் பிற சமயத்தினர் 13.54% வீதம் உள்ளனர்.[1]