ரோனால்டு மைக்கியுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோனால்டு மைக்கியுரா
Ronald Micura
துறைஉயிர்வேதியியல்
கல்வி கற்ற இடங்கள்லின்சு பல்கலைக்கழகம்
விருதுகள்லைபென் பரிசு

ரோனால்டு மைக்கியுரா (Ronald Micura ) என்பவர் ஆசுத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். இவருக்கு 2005 ஆம் ஆண்டு ஆசுத்திரிய அறிவியல் கழகம் வழங்கும் லைபென் பரிசு வழங்கப்பட்டது. ஆசுத்திரியாவில் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்களில் ஒன்றான லின்சு நகரத்திலுள்ள யோகானெசு கெப்ளர் லின்சு பல்கலைக்கழகத்தில் வேதியியல் படித்த இவர் இப்பல்கலைக்கழகத்திலேயே 1995 ஆம் ஆண்டில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். சூரிக் பல்கலைக்கழகத்திலும், உயிர் வேதியியல் நிறுவனம் ஒன்றிலும் முனைவர் பட்டமேற் பயிற்சியை மேற்கொண்ட இவர் 2000 ஆம் ஆண்டில் இன்சுபிரக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  • "Univ. Prof. Dr. Dipl.-Ing. Ronald MICURA". Archived from the original on 2016-03-30. பார்க்கப்பட்ட நாள் 2019-04-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோனால்டு_மைக்கியுரா&oldid=3857749" இலிருந்து மீள்விக்கப்பட்டது