உள்ளடக்கத்துக்குச் செல்

ரோட் டூ நந்திக்கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Road to Nandikadal
රණමඟ ඔස්සේ නන්දිකඩාල්
முதற்பதிப்பு (சிங்களம்)
நூலாசிரியர்கமல் குணரத்னவால்
நாடுஇலங்கை
மொழிசிங்களம்
ஆங்கிலம்
வெளியிடப்பட்ட நாள்
6 செப்டம்பர் 2016
ஊடக வகைஅச்சு (கெட்டி அட்டை, சாதா அட்டை)
பக்கங்கள்770
ISBN9789554323704

நந்திக்கடல் செல்லும் சாலை ( சிங்களம்: රණමඟ ඔස්සේ නන්දිකඩාල්, ) என்பது விடுதலைப் புலிகளின் தோல்வி குறித்த ஒரு புத்தகமாகும். இதை முன்னாள் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவால் எழுதியுள்ளார். குணரத்ன ஓய்வு பெற்ற ஒரு நாளுக்குப் பிறகு, 2016 செப்டம்பர் 6 அன்று இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்தின் சிங்கள மற்றும் ஆங்கில பதிப்புகள் ஒரே நாளில் வெளியிடப்பட்டன. இது வேலுப்பிள்ளை பிரபாகரனின் கொலை உட்பட ஈழப் போரின் போது நடந்த பல நிகழ்வுகளை உள்ளடக்கியது.

இலங்கைத் தரைப்படையின் 53வது பிரிவின் தளபதியாக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இருந்தார். அந்தப் பிரிவே விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்றதாக நம்பப்படுகிறது.

வரவேற்பு

[தொகு]

2016 ஆம் ஆண்டு கொழும்பு பன்னாட்டு புத்தகக் கண்காட்சியின் போது இந்த புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளும் ஒரு மணி நேரத்திற்குள் விற்றுத் தீர்ந்தன. மேலும் இது இலங்கையில் அதிகம் விற்பனையான புத்தகங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது. [1]

இருப்பினும், இந்தப் புத்தக்கத்தில் உள்ள வரலாற்றுத் தவறுகளுக்காகவும், முரண்பாடுகளுக்காவும் அப்போதைய வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவால் விமர்சிக்கப்பட்டது. [2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோட்_டூ_நந்திக்கடல்&oldid=4356194" இலிருந்து மீள்விக்கப்பட்டது