ரோடியம்(II) அசிட்டேட்டு
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ரோடியம்(II) அசிட்டேட்டு
| |
வேறு பெயர்கள்
டைரோடியம் டெட்ரா அசிட்டேட்டு,
டெட்ராகிசு(அசிட்டேட்டோ)டைரோடியம்(II), ரோடியம் டையசிட்டேட்டு இருபடி, டெட்ராகிசு(μ-அசிட்டேட்டோ)டைரோடியம் | |
இனங்காட்டிகள் | |
15956-28-2 ![]() | |
ChemSpider | 20370 ![]() |
EC number | 240-084-8 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 152122 |
வே.ந.வி.ப எண் | VI9361000 |
| |
பண்புகள் | |
C8H12O8Rh2 | |
வாய்ப்பாட்டு எடை | 441.99 கி/மோல் |
தோற்றம் | மரகதப் பச்சை தூள் |
அடர்த்தி | 1.126 கி/செ.மீ3 |
உருகுநிலை | >100 °செல்சியசு |
கொதிநிலை | சிதைவடையும் |
கரையும் | |
பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் | முனைவு கரிமக் கரைப்பான்கள் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைசாய்வு |
ஒருங்கிணைவு வடிவியல் |
எண்முகம் |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0 D |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Coleparmer MSDS |
R-சொற்றொடர்கள் | 36/38 |
S-சொற்றொடர்கள் | 15, 26, 28A, 37/39 |
தீப்பற்றும் வெப்பநிலை | குறைவாக தீப்பற்றும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ரோடியம்(II) அசிட்டேட்டு (Rhodium(II) acetate) என்பது Rh2(AcO)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். மூலக்கூறு வாய்ப்பாட்டிலுள்ள AcO− என்பது அசிட்டேட்டு (CH3CO−2) அயனியை குறிக்கிறது. அடர்பச்சை நிறத்தில் தூளாக உள்ள இச்சேர்மம் நீர் உட்பட முனைவுக் கரைப்பான்களில் இலேசாகக் கரைகிறது. ஆல்க்கீன்களை வளையபுரோப்பேனாக்கும் வினைகளில் ரோடியம்(II) அசிட்டேட்டு ஒரு வினையூக்கியாகப் பயன்படுகிறது. டைரோடியம் டெட்ரா அசிட்டேட்டு,டெட்ராகிசு(அசிட்டேட்டோ)டைரோடியம்(II),ரோடியம் டையசிட்டேட்டு இருபடி,டெட்ராகிசு(μ-அசிட்டேட்டோ)டைரோடியம் போன்ற பெயர்களாலும் ரோடியம் (II) அசிட்டேட்டு அழைக்கப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]ரோடியம்(II) அசிடேட்டு பொதுவாக அசிட்டிக் அமிலத்தில் (CH 3 COOH) உள்ள நீரேற்ற ரோடியம்(III) குளோரைடை வெப்பப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது :[1]. ரோடியம்(II) அசிடேட்டு இருமம் ஈந்தணைவி பரிமாற்றத்திற்கு உட்படுகிறது, அசிடேட்டு குழுவை மற்ற கார்பாக்சிலேட்டுகள் மற்றும் தொடர்புடைய குழுக்கள் இடம் மாற்றுகின்றன [2]
- Rh2(OAc)4 + 4 HO2CR → Rh2(O2CR)4 + 4 HOAc.
கட்டமைப்பு
[தொகு]ரோடியம்(II) அசிடேட்டின் கட்டமைப்பில் ஒரு சோடி ரோடியம் அணுக்கள் உள்ளன, ஒவ்வொன்றும் எண்முக மூலக்கூற்று வடிவத்திலுள்ளன. நான்கு அசிடேட்டு ஆக்சிசன் அணுக்கள், நீர் மற்றும் ஒரு 2.39 ஆங்சிட்ராங் நீளமுள்ள Rh-Rh பிணைப்பு ஆகியவற்றால் வரையறுக்கப்பட்டுள்ளன. . நீர் சேர்க்கை பரிமாற்றம் செய்யக்கூடியது, மேலும் பலவிதமான பிற லூயிசு தளங்கள் அச்சு நிலைகளுடன் பிணைக்கப்படுகின்றன[3]. தாமிரம்(II) அசிடேட் டு மற்றும் குரோமியம்(II) அசிடேட் டு சேர்மங்கள் இதே போன்ற கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்கின்றன.
வேதிப்பண்புகள்
[தொகு]கொதிநிலை வெப்பநிலையில் இச்சேர்மம் சிதைவடைகிறது. கரிமத் தொகுப்பு வினைகளுக்கு டைரோடியம் டெட்ரா அசிட்டேட்டு பயன்பாட்டை வெளிப்படுத்திய முன்னோடிகளாக டெய்சி மற்றும் சக ஊழியர்கள் திகழ்ந்தனர். வேதிப் பிணைப்புகளில் செருகல் மற்றும் ஆல்கீன்களின் வளைய புரோப்பேனேற்றம் [4][5] மற்றும் அரோமாட்டிக் அமைப்புகள் உள்ளிட்டவை விரிவாக ஆராயப்படும் வினைகள் ஆகும்[6]. தெரிவு செய்யப்பட்ட ரிபோநியூக்ளியோசைடுகளை அவற்றினுடைய 2 மற்றும் 3 –OH குழுக்களில் பிணைப்பதில் இச்சேர்மம் முக்கிய பங்கு வகிக்கிறது. ரோடியம்(II) அசிட்டேட்டு இருபடி தாமிரம்(II) அசிட்டேட்டுடன் ஒப்பிடுகையில் அதிக வினைத்திறன் கொண்டதாக உள்ளது. மேலும் ரிபோநியூக்ளியோசைடுகளிலிருந்து டியாக்சிநியூக்ளியோசைடுகளை வேறுபடுத்திக் காட்டுவதற்கு இச்சேர்மம் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது[7]. ஏனெனில் ரோடியம்(II) அசிட்டேட்டு நீர் போன்ற சேர்மம் கலந்த நீரிய கரைசல்களில் கரைகிறது. ஆனால் தாமிரம்(II) அசிட்டேட்டு நீர் கலக்காத கரைசல்களில் மட்டும் கரைகிறது.
தெரிவு செய்யப்பட்ட வினையூக்க வினைகள்
[தொகு]டைரோடியம் டெட்ரா அசிட்டேட்டு ஒரு வினையூக்கியாகவும் பயன்படுகிறது. இதனால் C–H மற்றும் X–H பிணைப்புகளை செருகி சேர்க்கப்படுகிறது. (X = N, S, O).
வளையபுரோப்பேனேற்றம்
[தொகு]
டையசோ கார்பனைல் சேர்மங்கள் சிதைவடைதல் வழியாக வளையபுரோப்பேற்றம் நிகழ்கிறது.
அரோமாட்டிக் வளையக் கூட்டு
[தொகு]
இரண்டு பகுதிக்கூறு மற்றும் மூன்று பகுதிக்கூறு வினைகளையும் ரோடியம் அசிட்டேட்டு வினையூக்குகிறது.
C–H செருகல்
[தொகு]
Rh(II)-வினையூக்கி பல்வேறு கரிமச் சேர்மங்கள் உருவாதலுக்கு காரனமான C–H பிணைப்புகளை செருக பயனுள்ளதாக உள்ளது. .
ஆல்ககால்களின் ஆக்சிசனேற்றம்
[தொகு]
அல்லைலிக் மற்றும் பென்சைலிக் ஆல்ககால்கள் தொடர்புடைய கார்பனைல் சேர்மங்களாக ஆக்சிசனேற்றப்படுகின்றன. இவ்வினையில் வினையூக்கியாக Rh2(OAc)4 பயன்படுகிறது.
X–H செருகல் (X = N, S, O)
[தொகு]
Rh(II) கார்பினாய்டு அமீன்கள், ஆல்ககால்கள், அல்லது தயோல்கள் ஆகியவற்றுடன் வினைபுரிந்து முறையான மூலக்கூறு அல்லது மூலக்கூற்றிடை X–H பிணைப்பை உருவாக்குகிறது.(X = N, S, O) செருகல் இடைநிலைப் பொருள் உருவாதல் வழியாக நிகழ்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rempel, G. A.; Legzdins, P.; Smith, H.; Wilkinson, G. (1972). "Tetrakis(acetato)dirhodium(II) and Similar Carboxylato Compounds". Inorg. Synth.. Inorganic Syntheses 13: 90–91. doi:10.1002/9780470132449.ch16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470132449.
- ↑ Doyle, M. P. (2000). "Asymmetric Addition and Insertion Reactions of Catalytically-Generated Metal Carbenes". In Ojima, Iwao (ed.). Catalytic Asymmetric Synthesis (2nd ed.). New York: Wiley. ISBN 978-0-471-29805-2.
- ↑ Cotton, F. A.; Deboer, B. G.; Laprade, M. D.; Pipal, J. R.; Ucko, D. A. (1971). "The crystal and molecular structures of dichromium tetraacetate dihydrate and dirhodium tetraacetate dihydrate". Acta Crystallogr B 27 (8): 1664. doi:10.1107/S0567740871004527.
- ↑ Paulissen, R.; Reimlinger, H.; Hayez, E.; Hubert, A. J.; Teyssié, P. (1973). "Transition metal catalysed reactions of diazocompounds. II: Insertion in the hydroxylic bond". Tetrahedron Lett. 14 (24): 2233. doi:10.1016/S0040-4039(01)87603-6.
- ↑ Hubert, A. J.; Feron, A.; Warin, R.; Teyssie, P. (1976). "Synthesis of iminoaziridines from carbodiimides and diazoesters : A new example of transition metal salt catalysed reactions of carbenes". Tetrahedron Lett. 17 (16): 1317. doi:10.1016/S0040-4039(00)78050-6.
- ↑ Anciaux, A. J.; Demonceau, A.; Hubert, A. J.; Noels, A. F.; Petiniot, N.; Teyssié, P. (1980). "Catalytic control of reactions of dipoles and carbenes; an easy and efficient synthesis of cycloheptatrienes from aromatic compounds by an extension of Buchner's reaction". J. Chem. Soc., Chem. Commun. (16): 765–766. doi:10.1039/C39800000765. https://archive.org/details/sim_journal-of-the-chemical-society-chemical-communications_1980_16/page/765.
- ↑ Berger, N. A.; Tarien, E.; Eichhorn, G. L. (1972). "Stereoselective Differentiation between Ribonucleosides and Deoxynucleosides by Reaction with the Copper(II) Acetate Dimer". Nature New Biology 239 (95): 237–40. doi:10.1038/newbio239237a0. பப்மெட்:4538853. http://www.nature.com/nature-newbio/journal/v239/n95/abs/newbio239237a0.html.