ரோஜா பூங்கா ஊட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரசு ரோஜா பூங்கா ஊட்டி அனைத்து வகை ரோஜா செடிகளை கொண்ட தோட்டமாகும். இது 1995 இல் சீரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது. 20000 கலப்பின ரோஜாக்கள் உள்ளன. மினியேச்சர் ரோசஸ், பாலிந்தாஸ், பப்பாஜெனா, ஃப்ளோரிபண்டா, ரம்பிலர்ஸ், யாக்கிமோர்.இவை ரோஜாவின் வகைகலள்.

அமைவிடம்[தொகு]

இப்பூங்கா முன்னர் ஜெயலலிதா ரோஸ் கார்டன், நூற்றாண்டு ரோஜா பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் ஊட்டி நகரத்தின் எல் ஹில் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

நிறுவுதல் : அரசு தாவரவியல் பூங்காவில் நூற்றாண்டு மலர் கண்காட்சியை நினைவுகூரும் வகையில் இந்த மலர்கள் நான்கு ஹெக்டேர் பரப்பளவில் ஐந்து வளைவு மண்டபங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த தோட்டம் தமிழ்நாடு தோட்டக்கலை திணைக்களத்தால் பராமரிக்கப்படுகிறது. ரோஸ் கார்டனில் உள்ள நுழைவாயிலில் தமிழ்நாட்டின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரிலே பெயரிடப்பட்ட ஒரு ரோஜா வகை ஊட்டிக்கு ஒரு தனிப்பட்ட சிறப்பு. எனவே தோட்டம் ரோஜாக்களை வளர்ப்பதற்கு சிறந்த பருவகால நிலைமைகளைக் கொண்டுள்ளது. வெப்பநிலை மாறுபாடு குறைவானது மற்றும் மழைப்பொழிவு என்பது சீரானது. இது நீண்ட பூக்கும் பருவத்தில் விளைகிறது. இங்கு ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஜா_பூங்கா_ஊட்டி&oldid=2577140" இருந்து மீள்விக்கப்பட்டது