ரோஜாவா
வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் தன்னாட்சி நிர்வாகம் (Autonomous Administration of North and East Syria, NES ), மேலும் இது வடக்கு சிரியா ஜனநாயக கூட்டமைப்பின் முன்னாள் பெயரான ரோஜாவா, என்றும் அறியப்படுவது, [a] ரோஜாவா என்பது வடகிழக்கு சிரியாவில் உள்ள ஒரு நடைமுறைப்படியான தன்னாட்சி பகுதி ஆகும். [6] [7] இது அஃப்ரின், ஜசிரா, யூப்ரடீஸ், அல்-றக்கா, தப்கா, மன்பீஜ் மற்றும் டீர் ஈஸ்-சோர் ஆகிய பகுதிகளில் சுயராட்சித் துணைப் பகுதிகளைக் கொண்டுள்ளது. [6] [8][9] தற்போதைய ரோஜாவா பகுதியின் மோதல் மற்றும் பரந்த அளவிலான சிரிய உள்நாட்டுப் போரின் பின்னணியில் இந்த பிராந்தியமானது அதன் நடப்பு சுயாட்சியை 2012 இல் பெற்றது. இந்த மோதல்களில் அதன் உத்தியோகபூர்வ இராணுவப் படையான சிரிய ஜனநாயகப் படைகள் (எஸ்.டி.எஃப்) பங்கேற்றன.[10]
சில வெளிநாட்டு உறவுகளை கவனத்தைப் பெற்ற அதே வேளையில், இப்பகுதி சிரியாவின் அரசாங்கமோ அல்லது எந்தவொரு சர்வதேச அரசோ அல்லது அமைப்போ தன்னாட்சி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவிலை.[11][12] வடகிழக்கு சிரியா பகுதியில் குர்து மக்கள், அராபியர் மற்றும் அசிரிய மக்கள் என பல இனக் குழுவினர் கணிசமான அளவில் தாயகமாக கொண்டு வாழுகின்றனர். இவர்களுடன் சிறிய அளவிலான மக்கள்தொகையில் டர்க்மென் மக்கள், ஆர்மேனியர்கள் மற்றும் சர்க்காசியர்கள் வாழ்கின்றனர். [6] [7]
உள்ளூர் அதிகார பிரிவின் ஆதரவாளர்கள் இது சமய சார்பற்ற அரசியலாக [6] [13][14] அதிகார பரவலாக்கம், பாலினச் சமனிலை, [7] [6] சுற்றுச்சூழல் பேண்தகுநிலை, மத, கலாச்சார மற்றும் அரசியல் பன்முகத்தன்மை ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஒரு சுதந்திரமான சோசலிச சித்தாந்தத்தின் அடிப்படையில் நேரடி மக்களாட்சி விருப்பங்களைக் கொண்டதாகவும், இந்த மதிப்பஈடுகள் அதன் அரசியலமைப்பு, சமூகம் மற்றும் அரசியலில் பிரதிபலிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். இது முழு சுதந்திரத்திற்கும் பதிலாக ஒட்டுமொத்த கூட்டாட்சி சிரியாவிற்கும் ஒரு முன்மாதிரியாக இருப்பதாகக் கூறுகின்றனர்.[15][16] தன்னாட்சி பிராந்தியத்திற்கு எதிரான விமர்சனங்களில் சர்வாதிகாரவாதம், [6] குர்திமயமாக்கல், [7] [17][18] விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் மீதான தடை,[19] [6] மற்றும் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சியின் (பி.கே.கே) செல்வாக்கு ஆகியவை அடங்கும்.
2016 முதல், துருக்கிய மற்றும் துருக்கிய ஆதரவுடைய சிரிய கிளர்ச்சிப் படைகள் எஸ்.டி.எஃப்-க்கு எதிரான தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளின் மூலம் ரோஜாவாவின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ளன.
அரசியல் பெயர்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள்[தொகு]
வடக்கு சிரியா பகுதிகள் மேற்கத்திய குர்திஸ்தான் / மேற்கு குர்திஸ்தான் ( குர்திய மொழி Rojavayê Kurdistanê ) அல்லது வெறுமனே Rojava (/ˌroʊʒəˈvɑː/ ROH-zhə-VAH; குர்திய மொழி : [roʒɑˈvɑ] "the West") எனப்படுகின்றது.[20] [6] [21] இது அகண்ட குர்திஸ்தானின் நான்கு பகுதிகளில் ஒன்றாகும்.[22] இதனால் "ரோஜாவா" என்ற பெயரானது குர்திஷ் அடையாளம் மற்றும் நிர்வாகத்துடன் தொடர்புடையது. குர்திஷ் அல்லாத குழுக்களான, மிக முக்கியமாக அரேபியர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் இப்பகுதி விரிவுபடுத்திக்கொண்டதோடு, அப்பகுதிகளை பெருமளவில் சேர்க்கப்பட்டதால், பிற இனத்தவர்கள் "ரோஜாவா" பகுதியின் அடையாளத்தை குறைத்து மதிப்பிடுவதற்கும் பிற இனங்களும் இதை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை நிர்வாகத்தால் குறைவாக உள்ளது. [6] இருந்தாலும் இதை பொருட்படுத்தாமல், உள்ளூர் மற்றும் சர்வதேச பார்வையாளர்களால் இந்த அரசியல் பகுதி தொடர்ந்து "ரோஜாவா" என்று அழைக்கப்பட்டது,[4][23] பத்திரிகையாளர் மெடின் குர்கன் 2019 ஆம் ஆண்டளவில் "ரோஜாவாவின் கருத்து உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறும் ஒரு பிராண்டாக மாறியது" என்று குறிப்பிட்டார். வடகிழக்கு சிரியாவின் ஜசிரா மாகாணத்தைச் சுற்றியுள்ள நிலப்பரப்பை வரலாற்று அசீரிய தாயகத்தின் ஒரு பகுதியான கோசார்டோ (செவ்வியல் சிரியாக்- ܓܙܪܬܐ, romanized: Gozarto ) என்று சிரிய-அசிரியர்களால் அழைக்கப்படுகிறது. இப்பகுதிக்கு பெடரல் வடக்கு சிரியா என்றும், வடக்கு சிரியாவின் ஜனநாயக கூட்டாட்சி தன்னாட்சி பகுதிகள் என்றும் செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. [6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Lister (2015), ப. 154.
- ↑ Allsopp & van Wilgenburg (2019), ப. 89.
- ↑ https://www.kurdistan24.net/en/news/51940fb9-3aff-4e51-bcf8-b1629af00299/-rojava--no-longer-exists---northern-syria--adopted-instead-
- ↑ 4.0 4.1 "Turkey's military operation in Syria: All the latest updates". al Jazeera. 14 October 2019. 29 October 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;morningstar
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 6.7 6.8 6.9 Allsopp & van Wilgenburg (2019).
- ↑ 7.0 7.1 7.2 7.3 Zabad (2017).
- ↑ "Electoral Commission publish video of elections 2nd stage | ANHA". hawarnews.com. 1 December 2017. 1 December 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ "Delegation from the Democratic administration of Self-participate of self-participate in the first and second conference of the Shaba region". Cantonafrin.com. 4 February 2016. 9 ஆகஸ்ட் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 June 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Turkey's Syria offensive explained in four maps". BBC. 14 October 2019. 1 November 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Fight For Kobane May Have Created A New Alliance In Syria: Kurds And The Assad Regime". International Business Times. 8 October 2014. 18 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Syria’s war: Assad on the offensive". The Economist. 2016-02-13. https://www.economist.com/news/21690203-city-was-once-syrias-largest-faces-siege-assadu2019s-grip-tightens. பார்த்த நாள்: 2016-05-01.
- ↑ "Syria Kurds challenging traditions, promote civil marriage". ARA News. 2016-02-20. 22 February 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-08-23 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Carl Drott (25 May 2015). "The Revolutionaries of Bethnahrin". Warscapes. 8 October 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Jongerden, Joost (5–6 December 2012). "Rethinking Politics and Democracy in the Middle East" (PDF). Ekurd.net. 15 மார்ச் 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 9 October 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "ANALYSIS: 'This is a new Syria, not a new Kurdistan'". MiddleEastEye. 2016-03-21. 2016-05-25 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Kurds accused of "ethnic cleansing" by Syria rebels". cbsnews. June 22, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Syrian rebels accuse Kurdish forces of 'ethnic cleansing' of Sunni Arabs". The Telegraph. ஏப்ரல் 17, 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. June 22, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Khalaf, Rana. "Governing Rojava Layers of Legitimacy in Syria" (PDF). The Royal Institute of International Affairs. 2017-11-19 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2019-11-29 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Lister 2015: "On 19 July the PYD formally announced that it had written a constitution for an autonomous Syrian Kurdish region to be known as West Kurdistan."
- ↑ "Yekîneya Antî Teror a Rojavayê Kurdistanê hate avakirin". Ajansa Nûçeyan a Hawar (Kurdish). 7 April 2015. 12 May 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 May 2015 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
- ↑ Kurdish Awakening: Nation Building in a Fragmented Homeland, (2014), by Ofra Bengio, University of Texas Press
- ↑ Metin Gurcan (7 November 2019). "Is the PKK worried by the YPG's growing popularity?". al-Monitor. 7 November 2019 அன்று பார்க்கப்பட்டது.
Works cited[தொகு]
- Allsopp, Harriet; van Wilgenburg, Wladimir (2019). The Kurds of Northern Syria. Volume 2: Governance, Diversity and Conflicts. London; New York City; etc.: I.B. Tauris. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-8386-0445-5. https://books.google.com/books?id=9vWlDwAAQBAJ.
- Lister, Charles R. (2015). The Syrian Jihad: Al-Qaeda, the Islamic State and the Evolution of an Insurgency. ஆக்சுபோர்டு: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780190462475. https://archive.org/details/CharlesR.ListerTheSyrianJihadAlQaedaTheIslamicStateAndTheEvolutionOfAnInsurgency..
- Sinclair, Christian; Kajjo, Sirwan (2013). "The Evolution of Kurdish Politics in Syria". The Arab Revolts. Dispatches on Militant Democracy in the Middle East. Bloomington, Indiana: Indiana University Press. பக். 177–187. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-253-00975-3. https://books.google.com/books?id=RQIXtU-EYN4C.
- Tejel, Jordi (2009). Syria's Kurds: History, Politics and Society. Abingdon-on-Thames, New York City: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-42440-0. https://books.google.com/books?id=g4f54qsU618C.
- Zabad, Ibrahim (2017). Middle Eastern Minorities: The Impact of the Arab Spring. London; New York City: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-472-47441-4. https://books.google.com/books?id=XiAlDwAAQBAJ.
பிழை காட்டு: <ref>
tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/>
tag was found