ரோசென்பெர்கைட்டு
Appearance
ரோசென்பெர்கைட்டு (Rosenbergite) என்பது AlF3•3H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கதிரியக்கப் பண்பு இல்லாத இக்கனிமம் ஓர் ஆலைடு வகைக் கனிமம் என்று வகைப்படுத்தப்படுகிறது.
இக்கனிமம் நிறமற்று காணப்படுகிறது. நாற்கோணம் முதல் இரட்டைக்கூர்நுனி கோபுரம் வரையிலான வடிவங்களில் இது படிகமாகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த புவி வேதியியல் வல்லுநரான பிலிப் இ ரோசென்பெர்க் என்பவர் முதன்முதலில் கண்டுபிடித்த காரணத்தால் இப்பெயர் பெற்றது. மத்திய இத்தாலியின் டசுக்கனியென்ற நிர்வாக அலகிலுள்ள செல்டைன் சுரங்கத்திலும், அந்தாட்டிக்கா கண்டத்தின் ரோசு தீவிலுள்ள எரிபசு மலையிலும் ரோசென்பெர்கைட்டு கிடைக்கிறது. மோவின் அளவுகோல் கடினத் தன்மை மதிப்பு 3 முதல் 3.5 வரை இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.