ரோசு தீவு (அந்தமான்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரோசு தீவு
Nickname: சர் ஹக் ரோசு தீவு
ரோசு தீவு is located in Andaman and Nicobar Islands
ரோசு தீவு
ரோசு தீவு
ரோசு தீவு is located in இந்தியா
ரோசு தீவு
ரோசு தீவு
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்11°46′59″N 93°04′52″E / 11.783°N 93.081°E / 11.783; 93.081ஆள்கூறுகள்: 11°46′59″N 93°04′52″E / 11.783°N 93.081°E / 11.783; 93.081
தீவுக்கூட்டம்அந்தமான் தீவு
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
பரப்பளவு0.69 km2 (0.27 sq mi)
நீளம்1.2 km (0.75 mi)
அகலம்0.8 km (0.5 mi)
கரையோரம்3.5 km (2.17 mi)
உயர்ந்த ஏற்றம்73 m (240 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை0
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
பின்கோடு744104[1]
Telephone code031927 [2]
ISO codeIN-AN-00[3]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in

ரோசு தீவு (Rose Island,) சில நேரங்களில் சிறிய நீல் தீவு என்று அழைக்கப்படுகிறது. அந்தமான் தீவுகளில்மக்கள் வசிக்காத தீவுகளில் இதுவும் ஒன்றாகும். இது இந்திய ஒன்றிய பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஓர்பகுதியான தெற்கு அந்தமான் மாவட்டத்தைச் சார்ந்த நிர்வாக பகுதியாக உள்ளது [4]

இத்தீவு போர்ட் பிளேரின் வடகிழக்கில் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

சொற்பிறப்பியல்[தொகு]

இத்தீவிற்கு முன்னாள் ஃபீல்ட் மார்ஷல் ஹக் ரோஸின் பெயரிடப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

இத்தீவின் மலையடிவாரத்தில் கலங்கரை விளக்கம் ஒன்று அமைந்துள்ளது. இக் கலங்கரை விளக்கத்தின் கோபுரத்தை அடைய 70 படிகள் உள்ளன. கலங்கரை விளக்கம் கவனிக்கப்படாத அமைப்பாக உள்ளது. பராமரிப்பு ஊழியர்களுக்கு நீர்த்தேக்க தொட்டி மற்றும் ஓய்வு அறை உள்ளது. ஒளியில் சுழலும் டிஏ (கரைந்த அசிட்டிலீன் ) எரிவாயு பர்னர் மற்றும் எரிவாயு மோட்டார் கொண்ட பாதரச தொட்டியில், மூன்றாம் வரிசை சுழலும் பார்வை அமைப்பு உள்ளது. இவை அனைத்தும் எம்/எஸ் பிபிடி, பாரிஸ் நிறுவனத்தினால் வழங்கப்பட்டவை. சிஐ கோபுரத்தின் மேல் விளக்கு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த கலங்கரை விளக்கம் 1969ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாளில் இயக்கப்பட்டது. சுழற்சி முறையில் அடிக்கடி ஏற்பட்ட தோல்விகள் காரணமாக, சுழலும் ஒளியியல் அமைப்பு அகற்றப்பட்டு, 500-milliமீட்டர் (20-அங்குலம்) வெட்டுகளுடன் மெருகூட்டப்பட்ட ஒளி அமைப்பு 1978ல் நிறுவப்பட்டது. டிஏ வாயுடன் கூடிய பர்னர் டிஏ கேஸ் ஃப்ளாஷரால் சூரிய வால்வுடன் மாற்றப்பட்டது. இதனால் டிஏ வாயுவின் நுகர்வு குறைந்தது, இனால் ஒளியின் அடர்வும் குறைந்தது.

டிஏ வாயு விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதால் சூரிய சக்தியின் இயக்கத்தில் மாற்றுவது அவசியமானது. எனவே சூரிய ஒளி மூலத்தை அதே பார்வையில் அதே பீடத்தில் 12V 100W அலசன் விளக்குடன் மாற்றியமைக்கப்பட்டது. இவ்வமைப்பு 1993ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் நாள் முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

நிலவியல்[தொகு]

இந்த தீவு ரிச்சியின் தீவுக்கூட்டத்தினைச் சார்ந்தது. இது 4 கிலோ மீட்டர் தொலைவில் நீல் தீவின் தெற்கே அமைந்துள்ளது. இது இப்பகுதியில் 'சோட்டா' நீல் ('சிறிய நகம்') என்று அழைக்கப்படுகிறது. [5]

நிர்வாகம்[தொகு]

அரசியல் ரீதியாக, ரோசு தீவு போர்ட் பிளேர் வட்டத்தின் கீழ் உள்ள நிர்வாகப் பகுதியாகும். [6]

புள்ளிவிவரங்கள்[தொகு]

இத்தீவில் மக்கள் எவரும் வசிக்கவில்லை.

பட தொகுப்பு[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "A&N Islands - Pincodes". 22 செப்டம்பர் 2016. 23 மார்ச்சு 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 செப்டம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. 2019-10-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-09-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. Registration Plate Numbers added to ISO Code
  4. "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. 2011-01-16 அன்று பார்க்கப்பட்டது.
  5. info
  6. "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. 2017-08-28 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-09-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  • விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Ritchie's Archipelago
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசு_தீவு_(அந்தமான்)&oldid=3351931" இருந்து மீள்விக்கப்பட்டது