ரோசாலியா லாசரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதக்க சாதனைகள்
இணை ஒலிம்பிக் தடகளப் போட்டிகள்
நாடு  எசுப்பானியா
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2000 சிட்னி நீளம் தாண்டுதல் எஃப்12
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1996 அட்லான்டா நீளம் தாண்டுதல் எஃப் 10-11
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2004 ஏதென்ஸ் நீளம் தாண்டுதல் - எஃப்12

ரோசாலியா லாசரோ (Rosalía Lázaro) எசுப்பானியாவைச் சேர்ந்த இவர் ஓர் இணை ஒலிம்பிக் தடகள வீரராவார். முக்கியமாக எஃப் 12 வகைப்பாட்டில் நீளம் தாண்டுதல் போட்டிகளில் போட்டியிடுகிறார்.

1992 முதல் 2008 வரை ஒவ்வொரு கோடைகால இணை ஒலிம்பிக்கிலும் இவர் போட்டியிட்டார். இவர் எப்போதும் நீளம் தாண்டுதலில் போட்டியிட்டார். ஆனால் 1992 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் 100 மீட்டரிலும், 1996 இல் பென்டத்லானிலும் போட்டியிட்டார். இந்த விளையாட்டுகளில் இவர் நீளம் தாண்டுதலில் மூன்று பதக்கங்களை வென்றார். 1996இல் எப் 10/11 வகையில் தனது முதல் வெள்ளியை வென்றார்.

இவர் விளையாட்டு பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். மேலும், முக்கியமான இணை ஒலிம்பிக் நிகழ்வுகளுக்கான தடகளப் பயிற்சியைக் கையாளுகிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசாலியா_லாசரோ&oldid=3029247" இலிருந்து மீள்விக்கப்பட்டது