ரோசனா சாபர்
ரோசனா சாபர் | |
|---|---|
روشانے ظفر | |
| தாய்மொழியில் பெயர் | روشانے ظفر |
| தேசியம் | பாகிஸ்தானியர் |
| படித்த கல்வி நிறுவனங்கள் | |
| பணி | பெண்கள் மேம்பாட்டு ஆர்வலர் |
| அறியப்படுவது | காஷ்ஃப் அறக்கட்டளை |
ரோசனா சாபர் (Roshaneh Zafar) பாக்கித்தானைச் சேர்ந்த ஓர் மகளிர் மேம்பாட்டு ஆர்வலர் ஆவார். இவர் பெண்கள் பொருளாதார வலுவூட்டல் துறையில் பணியாற்றுகிறார். 1996 ஆம் ஆண்டில் பாக்கித்தானில் முதல் சிறப்பு சிறுநிதி அமைப்பான காஷ்ஃப் அறக்கட்டளையை இவர் உருவாக்கினா. இது பாக்கித்தான் முழுவதும் 5 மில்லியனுக்கும் அதிகமான பெண் தொழில்முனைவோருக்கு சேவை செய்துள்ளது. மேலும் அதன் முழுமையான நிதிச் சேவைத் திட்டத்தின் மூலம் பெண்களின் பொருளாதார வலுவூட்டலுக்கான பாதையை தொடர்ந்து வகுக்கிறது.[1][2][3]
தொழில் வாழ்க்கை
[தொகு]பாக்கித்தானிய அரசியல்வாதி எஸ். எம். ஜாபரின் மகளும், புகழ்பெற்ற இசைக்கலைஞர் மாலிகா பக்கராஜின் பேத்தியுமான ரோசானா இலாகூரில் பிறந்து வளர்ந்தார்.[4][5] ஐக்கிய அமெரிக்காவின் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, யேல் பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டு பொருளாதாரம் பயின்றார். பாக்கித்தானுக்கு திரும்பிய பிறகு 90 களின் முற்பகுதியில் இஸ்லாமாபாத்திலுள்ள உலக வங்கியில் பணியாற்றினார். 1996 ஆம் ஆண்டில், வங்காளதேசத்தின் கிராமின் வங்கி மற்றும் அதன் நிறுவனர் முகம்மது யூனுஸ் ஆகியோரால் ஈர்க்கப்பட்ட இவர், யூனுஸ் மற்றும் தனது பாட்டி மாலிகா பக்கராஜ் ஆகியோரின் நிதி உதவியுடன், பாக்கித்தானின் முதல் சிறப்பு சிறுநிதி அமைப்பான காஷ்ஃப் அறக்கட்டளையை இலாகூரில் நிறுவினார். இதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க முடியும் என உறுதியாக நம்பிக்கை கொண்டார்.[4][6]
பாக்கித்தானில் முதல் அசோகா உறுப்பினர்களில் ஒருவரான ரோசானா, 2004 ஆம் ஆண்டில் சுவாப் அறக்கட்டளை சமூகத் தொழில்முனைவோர் என்று பெயரிடப்பட்டார். 2007 ஆம் ஆண்டில், வளர்ச்சி மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் இவர் செய்த பணிகளை அங்கீகரிப்பதற்காக அப்போதைய அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் பாக்கித்தானின் மிக உயர்ந்த குடிமை விருதுகளில் ஒன்றான தம்கா-இ-இம்தியாஸ் என்ற விருதை வழங்கினார்.[7] அதே ஆண்டு, சமூக தொழில்முனைவுக்கான சுகோல் விருதையும் வென்றார்.[8]
பெண்களின் பொருளாதார வலுவூட்டலில் இவரது பணியின் விளைவாக, உலகப் பொருளாதார மன்றத்தால் நிறுவப்பட்ட பல உலகளாவிய நிகழ்ச்சி நிரல் அமைப்புகளில் ரோசானா பணியாற்றியுள்ளார். இதில் பாலின ஊதிய இடைவெளி மற்றும் பாக்கித்தான், ஐக்கிய நாடுகள் அவையின் உள்ளடக்கிய நிதித் துறைகள் குறித்த ஆலோசகர்கள் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.[9] 2018 முதல் 2020 வரை சிக்கனம் மற்றும் குடிமைச் சேவைகள் சீர்திருத்தங்கள் குறித்த பிரதமரின் பணிக்குழுவில் உறுப்பினராகவும், சுகாதாரத் துறையில் சீர்திருத்தங்களை ஊக்குவிப்பதற்காக பாக்கித்தான் மருத்துவ அமைப்பின் உறுப்பினராகவும் இருந்தார். மகளிர் உலக வங்கி, பாக்கித்தான் சிறுநிதி வலையமைப்பு, பின்கா வங்கி, பெண்களுக்கான கின்னெயர்ட் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் இயக்குநராக இவர் இருந்துள்ளார்.
ஊடகங்கள்
[தொகு]பாலினப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஊடகங்களிலும் சாபர் விரிவாக பணியாற்றியுள்ளார். 2011 இல் பாக்கித்தானின் ஹம் தொலைக்காட்சியுடன் இணைந்து ரெஹாய் என்ற நாடகத் தொடரில் பணியாற்றினார். இது குழந்தைத் திருமணப் பிரச்சினையை எழுப்பியது. இதைத் தொடர்ந்து குழந்தை பாலியல் துன்புறுத்தல் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு குறித்து ஹம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உதாரி என்ற நாடகத் தொடரில் பணியாற்றினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Roshaneh Zafar: Social Entrepreneur Empowers Women". US Embassy IIP Digital. United States Government Department of State. Retrieved 24 February 2016.
- ↑ News Desk (2019-03-08). "Roshaneh Zafar - Founder of Kashf Foundation: Celebrating Pakistani Women". Global Village Space (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2019-10-22.
- ↑ "Kashf Foundation awards women entrepreneurs". Business Recorder (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-03-24. Retrieved 2019-10-22.
- ↑ 4.0 4.1 Coleman, Isobel (2010). Paradise beneath her feet: how women are transforming the Middle East (1st ed.). New York: Random House. ISBN 978-1-4000-6695-7. கணினி நூலகம் 436030258.
- ↑ "Roshaneh Zafar: Microfinance Pioneer in Pakistan". Women's World Banking (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-10-25. Retrieved 2021-04-11.
- ↑ Arabic; Africa, Middle East &. "Small Loans, Large Purpose: How Roshaneh Zafar Became a Leader in Pakistani Microfinance". Knowledge@Wharton (in ஆங்கிலம்). Retrieved 2021-04-11.
- ↑ "Obama pays tribute to Roshaneh Zafar of Kashf Foundation". https://tribune.com.pk/story/9481/obama-pays-tribute-to-roshaneh-zafar-of-kashf/?amp=1.
- ↑ "Kashf Entrepreneurship Awards 2019". The Nation (in ஆங்கிலம்). 2019-03-22. Retrieved 2019-10-22.
- ↑ "Roshaneh Zafar". World Economic Forum (in ஆங்கிலம்). Retrieved 2021-04-11.