ரோகிங்கியா கொடி
பயன்பாட்டு முறை | கலாச்சார மற்றும் இன அடையாளம் Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag |
---|---|
அளவு | 2:3 |
ஏற்கப்பட்டது | 20 ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் |
வடிவம் | Green field charged with an ancient Rohingya coin in the centre |
கொடியின் வேறுபாடு ரோகிங்கியா கொடி | |
பயன்பாட்டு முறை | Original wide version Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag |
அளவு | 1:2 |
ரோகிங்கியா கொடி என்பது ரோகிங்கியா மக்களின் கலாச்சாரம் மற்றும் இன அடையாளத்திற்கான கொடியாக அமைந்துள்ளது. [1] 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அதன் உருவாக்கத்தை ஆவணப்படுத்திய ரோகிங்கியா அறிஞரும் எழுத்தாளருமான ஏ.எஃப்.கே ஜிலானி அதன் பயன்பாட்டை முதலில் குறிப்பிட்டார். [2] 20 மே 2018 அன்று, கொடியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு ரோகிங்கியா மொழி அகாதெமியால் உருவாக்கப்பட்டு பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது; இது தற்போது உலகெங்கிலும் உள்ள ரோகிங்கியா புலம்பெயர் சமூகங்களால் பயன்படுத்தப்படுகிறது.
வடிவமைப்பு
[தொகு]கொடியின் வடிவமைப்பானது வெள்ளை உரைகளைக் கொண்ட மஞ்சள் நாணயமானது பின்புலத்தில் பச்சை நிறத்தைக் கொண்டுள்ளது. பச்சை சமாதானத்தையும், தங்கம் செழிப்பையும், வெள்ளை தூய்மையையும் குறிக்கிறது. நாணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரபு உரை இஸ்லாத்தின் நான்கு நீதியுள்ள கலீபாக்களின் பெயர்களால் சூழப்பட்ட ஷாஹாதா ஆகும் : அவை மேலே அபுபக்கர், கீழே உமர், இடதுபுறத்தில் ஓத்மான் மற்றும் வலதுபுறத்தில் அலி ஆகியவை ஆகும். [2] [3]
விவரக்குறிப்புகள்
[தொகு]வண்ணங்கள்
[தொகு]திட்டம் | பச்சை | தங்கம் | வெள்ளை |
---|---|---|---|
ஆர்ஜிபி | 11, 102, 35 | 212, 175, 55 | 255, 255, 255 |
ஹெக்ஸாடெசிமல் | # 0B6623 | # D4AF37 | #FFFFFF |
CMYK | 0.89, 0.00, 0.66, 0.60 | 0.00, 0.17, 0.74, 0.17 | 0, 0, 0, 0 |
குறிப்புகள்
[தொகு]- ↑ "Myanmar - Burmese peoples". www.crwflags.com. CRW Flags Inc. பார்க்கப்பட்ட நாள் 16 July 2019.
- ↑ 2.0 2.1 "Arakanese Rohingya Flag". Rohingya Language Academy (in ஆங்கிலம்). Rohingya Language Academy. 5 May 2018. Archived from the original on 20 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 13 September 2019.
- ↑ "Rohingya | Flag | Myanmar". ozoutback.com.au. OzOutback. பார்க்கப்பட்ட நாள் 16 July 2019.