ரொல்சுரோயன் இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரொல்சுரோயன் இயக்கம் என்பது உருசியச் சிந்தனையாளர் லியோ ரொல்சுரோயின் மெய்யியல் மற்றும் சமய சிந்தனைகளை அடிப்படையாக கொண்ட சமூக இயக்கம் ஆகும். ரொல்சுரோய் தனது பார்வைகளுடன் உடன்பட்ட குமுகங்கள் தோன்றியது பற்றி மகிழ்ச்சி அடைந்தார் எனினும், தன்னைப் பின்பற்றி ஒரு இயக்கமோ அல்லது ஒரு கருத்தியலோ உருவாவதை அவர் விரும்பவில்லை. மாற்றாக ஒவ்வொருவரின் மனச்சாட்சியை பின்பற்றுமாறு வேண்டினார்.

நம்பிக்கைகளும் நடத்தைகளும்[தொகு]

ரொல்சுரோயன் இயக்கத்தார் கிறித்தவர்களாக தம்மை அடையாளப்படுத்தினாலும், கிறித்தவ சமய அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொள்வதில்லை. யேசுவின் அற்பதங்களை விட அவரின் கற்பித்தல்களிலேயே இவர்கள் கவனம் செலுத்தினார்கள்.

எளிய வாழ்முறை, பெரும்பாலும் மரக்கறி உணவு, மது அருந்தாதல், புகைப் பிடிக்காதல், பிரம்மாசியம் என்று வாழ்வார்கள். இவர்கள் அமைதிவாதிகள். nonresistance கொள்கையாளர்கள். ரொல்சுரோய் கிறிதவர் என்பதன் பொருள் என்ன என்பதை பின்வரும் ஐந்து முன்மொழிவுகளின் முன்வைக்கிறார்.

  • உன் எதிரிகளை நேசி
  • கோபம் கொள்ளாதே
  • தீயதை தீயதால் எதிர்க்காதே, தீயதற்கு நன்மையைக் கொடு
  • ஆசை கொள்ளாதே
  • ஆணைகளை ஏற்காதே
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொல்சுரோயன்_இயக்கம்&oldid=1390717" இருந்து மீள்விக்கப்பட்டது