ரொறன்ரோ பல்கலைக்கழக மாணவர் அடையாள உண்ணாநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்காபிரோ வளாக மாணவர்களின் ஒரு பகுதி

ரொறன்ரோ பலகலைக்கழக தமிழ் மாணவர்கள் ஈழத்தில் தமிழரின் பேரவலத்தை நிறுத்தக் கோரி உண்ணாநிலைப் போராட்டத்தை சனவரி 26, 2009 செவ்வாய்க்கிழமை 11 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் 11 மணிக்கு முடித்தனர். இதில் சென். யோர்ச் வளாகத்தில் 400 மாணவர்கள் வரையும், ஸ்காபிரோ வளாகத்தில் 150 மாணவர்கள் வரையும் பங்கு கொண்டனர். உணர்ச்சி மிக்க கவிதைகள் வாசிக்கப்பட்டன. கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் தமிழினத்தினர் மட்டுமின்றி குறிப்பிடத்தக்க அளவு பிற இனத்தைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.