ரொறன்ரோ தமிழியல் மாநாடு
கனேடியத் தமிழர் | |
கனேடியத் தமிழர் | |
நபர்கள் | |
பரம்பல் | |
அரசியல் | |
பொருளாதாரம் | |
பண்பாடும் கலைகளும் | |
கல்வி | |
தமிழ்க் கல்வி | |
சமூக வாழ்வு | |
அமைப்புகள் | |
வரலாறு | |
வரலாற்றுக் காலக்கோடு | |
குடிவரவு | |
எதிர்ப்புப் போராட்டங்கள் | |
இலக்கியமும் ஊடகங்களும் | |
இலக்கியம் | |
வானொலிகள் | |
இதழ்கள் | |
நூல்கள் | |
திரைப்படத்துறை | |
தொலைக்காட்சிச் சேவைகள் | |
நிகழ்வுகள் | |
தமிழ் மரபுரிமைத் திங்கள் | |
ரொறன்ரோ தமிழியல் மாநாடு | |
தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள் | |
ரொறன்ரோ தமிழியல் மாநாடு என்பது 2007 ஆம் ஆண்டு தொடக்கம் ஆண்டு தோறும் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் தெற்காசிவியல் நடுவத்தினாலும் (Center for South Asian Studies) உலக நடப்புகளுக்கான மொங் பள்ளியாலும் (Monk School of Global Affirs) ஒழுங்கு செய்யப்படும் தமிழியல் மாநாடு ஆகும். பொதுவாக மூன்று நாட்கள் ஒரு மையக் கருவை முன்வைத்து மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் பெரும்பான்மைக் ஆய்வுக் கட்டுரைகளும் நிகழ்வுகளும் ஆங்கிலத்தில் அமைகின்றன.
வட அமெரிக்கா, ஐரோப்பா, தென்னாசியா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களைச் சேர்ந்த தமிழியல் புலமையாளர்களை இந்த மாநாடு ஒன்றிணைக்கிறது. மானுடவியல், தொல்லியல், புலம்பெயர் கல்வி, வரலாறு, மொழியியல், இலக்கியம், அரசியல், உளவியல், பொது நலம், சமயம், சமூகவியல், அரசறிவியல், அரங்கக் கல்வி ஆகிய பல துறைகளைச் சேர்ந்த 5பேராளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது வழமை.
மாநாட்டின் இலக்குகள்
[தொகு]- வட அமெரிக்காவின் தமிழியல் கல்வி மையமாக ரொறன்ரோவை உருவாக்குவது.
- ரொறன்ரோ தமிழ்ச் சமூகத்தை ரொறன்ரோபல்கலைக்கழகத்துடனும் வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வியாளர்களுடனும் புத்தாக்க வழியில் மாநாட்டின் வழி இணைப்பது.
- வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வியாளர்கள் தங்களது படைப்புகளை சக கல்வியாளர்கள் மற்றும் தமிழ்ச் சமூகத்தின் முன்னிலையில் படைக்க ஒரு தொடர்ச்சியான வாய்ப்பை உருவாக்குவது.
- ரொறன்ரோமாணவர்களுக்கு தமிழியல் கல்வியின் விரிந்த தளத்தையும் வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வியை மேற்கொண்டிருக்கும் கல்வியாளர்களையும் அறிமுகப்படுத்துவது.
- தமிழ்நாடு, ஈழம் தொடர்பான கல்விகளில் ஈடுபட்டிருக்கும் கல்வியாளர்கள் தங்களது ஆய்வுகளைப் பரிமாறிக்கொள்ளவும், இந்தத் தமிழ் வழங்கும் இடங்கள் குறித்த கல்வியை பரந்த ஒப்பீட்டு முறையில் அணுகவும் வகைசெய்வது.
- தமிழர் புலம்பெயர்வை உயர்கல்வித் துறையில் ஒரு முக்கிய பாடமாக்குவதும் அது தொடர்பான ஈடுபாட்டை ஏற்படுத்துவதும்.
- மாநாட்டில் படைக்கப்படும் கட்டுரைகளை நுhலாக வெளியிடுவது.
வெளி இணைப்புகள்
[தொகு]- www.tamilstudiesconference.ca பரணிடப்பட்டது 2013-07-18 at the வந்தவழி இயந்திரம்
- [1] பரணிடப்பட்டது 2006-10-31 at the வந்தவழி இயந்திரம்