ராபர்ட் நாய்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரொபர்ட் நொய்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராபர்ட் நாய்சு (Robert Noyce)

ராபர்ட் நாய்சு. (ரொபர்ட் நொய்ஸ், Robert Noyce, டிசம்பர் 12, 1927ஜூன் 3, 1990), என்பவர் ஒரு புகழ் பெற்ற பொறியியலாளர். இவர் 1957ல் ஃவேர்ச்சைல்டு செமிகண்டக்டர் (Fairchild Semiconductor) என்னும் நுண் மின்கருவிகள் செய்யும் நிறுவனத்தை துணைநிறுவனராக இருந்து நிறுவினார். இதே போல 1968ல் இன்ட்டெல் (Intel) என்னும் கணினிச் சில்லுகள் செய்யும் நிறுவனத்தையும் தொடக்கினார். நோபல் பரிசு பெற்ற ஜாக் கில்பி அவர்களைப் போலவே நுண் தொகுசுற்றுகள் ஆக்கத்திற்கு ஆழ்பங்களித்த முன்னோடி இவர். ஜாக் கில்பியுடைய புத்தாக்கம், புத்தியற்றல் இவருடையதைக் காட்டிலும் சுமார் 6 மாதம் முந்தியது ஆனால், நாய்சு அவர்களின் முறை ஒரே அடிமனையில் தொகுசுற்றுக்களைச் செய்வதில் சிறந்தது, உற்பத்தி செய்யவும் எளிதானது. இன்றளவும் பயன்படும் அடிப்படையானதும் கூட.


External links[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_நாய்சு&oldid=1343557" இருந்து மீள்விக்கப்பட்டது