ரையாமாசு போலா
ட்ரவுட் பார்ப்
Trout barb | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | ஆக்டினோப்டெரிஜி |
வரிசை: | சிப்ரினிபார்ம்சு |
குடும்பம்: | சிப்ரினிடே |
துணைக்குடும்பம்: | டேனியோனியே |
பேரினம்: | ரையாமாசு |
சிற்றினம்: | ரை. போலா |
இருசொற் பெயரீடு | |
ரையாமாசு போலா (எப். ஹாமில்டன், 1822) | |
வேறுபெயர்கள்[2] | |
|
ட்ரவுட் பார்ப் (trout barb) அல்லது இந்தியன் ட்ரவுட் (ரையாமாசு போலா; Raiamas bola) என்பது சைப்ரினிடே குடும்பத்தினைச் சார்ந்த ஒரு கெண்டைமீன் ஆகும். இது வங்காள விரி குடாவைச் சுற்றியுள்ள நன்னீரில் வாழ்கிறது.
விளக்கம்
[தொகு]ட்ரவுட் பார்ப் ஒரு நீளமான, மெல்லிய உடலுடன் கூர்மையான பக்கவாட்டில் தட்டையான மூக்குடன் கூடியது. இளம் மீன்களில் ஒரு இணை மெல்லிய மேக்சில்லரி பார்பல்கள் காணப்படும்; ஆனால் இவை மிதிர்வடைந்த மீன்களில் இல்லை. மிகச் சிறிய செதில்கள் பக்கவாட்டு வரிசையில் 85-95 எண்ணிக்கையில் காணப்படும். பிளவுபட்ட வாலினைக் கொண்டது. உடலின் முதுகுப்பகுதி பச்சை நிறமாகவும், உடலின் நீளத்திற்கும் கருப்பு, வெள்ளி நிற தங்கக் கோடு மூலம் பிரிக்கப்படுகிறது. துடுப்புகள் மஞ்சள் நிறத்தில் உள்ளன. உடலில் ஏராளமான பச்சை மற்றும் நீல நிறப்புள்ளிகள் உள்ளன.[3] இவற்றின் அதிகபட்ச நீளம் 35 செ. மீட்டரும் எடை 2.3 கிலோ ஆகும்.[4]
பரவல்
[தொகு]இந்திய மாநிலங்களான அரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், அசாம், அருணாச்சல பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் இந்த ட்ரவுட் பார்ப் காணப்படுகிறது. இது பங்களாதேஷ், நேபாளம் மற்றும் மியான்மரிலும் காணப்படுகிறது. 1926ஆம் ஆண்டில் புனேவுக்கு அருகிலுள்ள இரண்டு ஏரிகளில் ட்ரவுட் பார்ப்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இங்கு இவை வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்தன.[1]
வாழ்விடம் மற்றும் சூழலியல்
[தொகு]ட்ரவுட் பார்ப் ஆறுகள் மற்றும் நீரோடைகள் [4] மற்றும் பள்ளங்கள் மற்றும் கால்வாய்களிலும் காணப்படுகிறது. [3] இந்தியாவில் இது பாறைகளுடன் கூடிய ஆற்றங்கரையோரங்களில் உள்ள தெளிவான நீரோடைகளை விரும்புகிறது. [1] மழைக்காலத்தின் ஆரம்பத்தில், ஜூன் மாதத்தில், அதிக வெள்ளப்பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கிறது. இது சுமார் மூன்று வயதில் பாலியல் முதிர்ச்சியடைகிறது. முட்டையிடும் பருவங்களில் ஆண் பிரகாசமாகவும், அவற்றின் பக்கவாட்டுத் தோல் கடுமையானதாகவும் மாறும். அகன்ற வாய் மற்றும் மெலிந்த உடல் ஆகியவை கொன்றுன்னும் வாழ்க்கை முறைக்கான தகவமைப்பாக உள்ளன.
பாதுகாப்பு
[தொகு]இந்த ட்ரவுட் பார்ப் மீனானது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தினால் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் முறையற்ற அழித்தொழிக்கும் மீன்பிடி முறைகளால் இச்சிற்றினம் அபாயத்திற்குள்ளாகியுள்ளது.
மீன்பிடித்தல்
[தொகு]ட்ரவுட் பார்ப் மென்மையான சுவையுள்ள சதைகளைக் கொண்டுள்ளதால் மீனவர்களின் தேர்வாக உள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Chaudhry, S. & Vishwanath, W. 2010. Raiamas bola. The IUCN Red List of Threatened Species 2010: e.T166464A6214772. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2010-4.RLTS.T166464A6214772.en. Downloaded on 26 September 2017.
- ↑ "Synonyms of Raiamas bola (Hamilton, 1822)". Fishbase. Retrieved 9 October 2017.
- ↑ 3.0 3.1 3.2 Shams Muhammad Galib. "Trout Barb Raiamas bola (Hamilton, 1822)". BdFish. University of Rajshahi. பார்க்கப்பட்ட நாள் 9 October 2017.
- ↑ 4.0 4.1 Daniel Pauly, ed. (2017). "Raiamas bola (Hamilton, 1822) Trout barb". Fishbase. பார்க்கப்பட்ட நாள் 9 October 2017.
{{cite web}}
: Missing|editor1=
(help)