ரைன் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரைன் நதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரைன் ஆறு
ரைன் ஐரோப்பாவின் முதன்மையான ஆறுகளுள் ஒன்று.
ரைன் ஐரோப்பாவின் முதன்மையான ஆறுகளுள் ஒன்று.

மூலம் கிரிசான்சு, சுவிட்சர்லாந்து
வாயில் வட கடல், நெதர்லாந்து

பாயும் நாடுகள்  சுவிட்சர்லாந்து,
 லெய்செஸ்டீன்,
 ஆஸ்திரியா,
 செருமனி,
 பிரான்ஸ்,
 நெதர்லாந்து

நீளம் 1,230 km (820 mi)
ஏற்றம் Vorderrhein: approx. 2,600 m (8,500 ft)
Hinterrhein: approx. 2,500 m (8,200 ft)
சராசரி வெளியேற்றம் Basel: 1,060 m³/s (37,440 ft³/s)
Strasbourg: 1,080 m³/s (38,150 ft³/s)
Cologne: 2,090 m³/s (73,820 ft³/s)
Dutch border: 2,260 m³/s (79,823 ft³/s)
வடிநிலப்பரப்பு 185,000 km² (71,430 mi²)

ரைன் ஆறு ஐரோப்பாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. இது ஐரோப்பாவின் நீளமான ஆறுகளில் ஒன்றும் ஆகும். இவ்வாற்றின் நீளம் ஏறத்தாழ 1230 கிலோமீட்டர்கள். மேலும் இது போக்குவரத்திற்குப் பயன்படும் முக்கியமான நீர்வழியும் கூட. இதன் கரையை ஒட்டி பல கோட்டைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த ஆறு பல நாடுகளுக்கு எல்லையாகவும் விளங்கியிருக்கிறது. நீர்வழிப் போக்குவரத்தில் ஒரு நாட்டுக்கு உட்பட்ட ஆற்றின் பகுதியில் படகுகள், கப்பல்கள் செல்கையில் நிறுத்தப்பட்டு வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது.

ஆல்ப்சு மலையில் உற்பத்தி ஆகும் இந்த ஆறு வடக்கு நோக்கிப்பாய்ந்து வடகடலில் கலக்கிறது. இவ் ஆறு சுவிட்சர்லாந்து, செர்மனி, பிரான்சு, லக்சம்பெர்கு, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் வழியே பாய்கிறது. இந்த ஆற்றங்கரையில் உள்ள மிகப்பெரிய நகரம் செர்மனியின் கலோன் நகரம் ஆகும். இங்கு பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். ஐரோப்பாவின் நடுப்பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் உள்ள தான்யூப் ஆற்றுக்கு அடுத்து பெரிய ஆறு இதுவேயாகும்.

ரைன் ஆறானது உயர் ரைன், மேல் ரைன், நடு ரைன், கீழ் ரைன் என்று நான்கு பெயர்களால் அது பாயும் பகுதியைப் பொறுத்து அழைக்கப்படுகிறது.

உயர் ரைன் (Higher Rhein)[தொகு]

கான்ஸ்டன்சு ஏரியிலிருந்து வெளியாகும் ரைன் ஆறானது மேற்கு நோக்கிப்பாய்கிறது. ரைன் அருவி உயர் ரைன் பகுதியில் உள்ளது. மேலும் ஆரெ ஆறு இப்பகுதியில் தான் ரைன் ஆற்றுடன் சேர்கிறது.

மேல் ரைன் (Upper Rhein)[தொகு]

நடு ரைன் (Middle Rhein)[தொகு]

ரைன் ஆறு செர்மனியின் நீளமான ஆறு. இங்கு நெக்கர், மெயின், மோசல்லே ஆகிய துணையாறுகள் உள்ளன. பிங்கென், பான் ஆகிய நகரங்களுக்கு இடையே ரைன் ஆறானது நில அரிப்பினால் உண்டான ரைன் பள்ளத்தாக்கின் வழியே பாய்கிறது. இப்பள்ளத்தாக்கு மிகவும் ஆழமானது. இந்தப் பகுதி எழில் மிக்கது. இப்பகுதியில் பல கோட்டைகளும் வைன் தோட்டங்களும் உள்ளன. நடு ரைனின் பொருளாதாரம் திராட்சைத் தோட்டத்தொழிலையும் சுற்றுலாவையுமே பெருமளவு சார்ந்துள்ளது.

கீழ் ரைன் (Lower Rhein)[தொகு]

ரைன் நதிக்கரையில் அமைந்த நகரங்கள்[தொகு]

சுவிட்சர்லாந்து[தொகு]

பிரான்சு[தொகு]

செர்மனி[தொகு]

நெதர்லாந்து[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைன்_ஆறு&oldid=2303662" இருந்து மீள்விக்கப்பட்டது