உள்ளடக்கத்துக்குச் செல்

ரைனோபிரிசுடிபார்மிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரைனோபிரிசுடிபார்மிசு
ரைனோபிரிசுடிபார்மிசு ரைனோபேடாசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
காண்ட்ரீக்திசியசு
வரிசை:
ரைனோபிரிசுடிபார்மிசு

நாயலோர் மற்றும் பலர், 2012
மாதிரி இனம்
பிரிசுடிசு பிரிசுடிசு
(லின்னேயஸ், 1758)

குடும்பங்கள்

ரைனோபிரிசுடிபார்மிசு (Rhinopristiformes / raɪnoʊ ˈprɪstɪfɔːrm iːz /) என்பது கதிர் மீன்களின் வரிசையாகும். இதில் சுறாக்களுடன் தொடர்புடைய குருத்தெலும்பு மீன்கள் , மண்வெட்டி கதிர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குழுக்கள் உள்ளன.[1][2][3][4]

குடும்பங்கள்

[தொகு]
  • குடும்பம் கிளாகோசிடிஜிடே (இராட்சத கிட்டார் மீன்கள்)
  • குடும்ப பிரிசுடிடே (வேளா மீன்கள்)
  • குடும்ப ரைனிடே (ஆப்பு மீன்கள்)
  • குடும்ப ரினோபாடிடே (கிட்டார் மீன்கள்)
  • குடும்ப டிரிகோனோரினிடே (பாஞ்சோ மீன்கள்)
கூடுதல் குடும்பங்கள்

மேற்கூறிய ஐந்து குடும்பங்களுடன் மேலும் இரண்டு குடும்பங்கள் கூடுதலாக ரைனோபிரிசுடிபார்மிசு வரிசையுடன் தொடர்புடையவை. ஆனால் இவற்றின் தொகுதிப் பிறப்பு உறவுகள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை:

  • குடும்ப பிளாட்டிரினிடே (முள் முதுகு கதிர்கள்)[5]
  • குடும்பம் சானோபேடிடே[5][2][3]

சிறப்பியல்புகள்

[தொகு]

ரைனோபிரிசுடிபார்மிசு (Rhinopristiformes) வரிசையில் உள்ள சிற்றினங்கள் பொதுவாக மெதுவான வளர்ச்சி, தாமத முதிர்வு மற்றும் குறைந்த கருவுறுதல் நிகழ்வுகளைக் கொண்டுள்ளன. தனியாகவோ அல்லது இணைந்தோ, இத்தகைய அம்சங்கள் இந்த குழுவில் உள்ள மீன்களின் அழிவுக்குக் காரணமாகின்றன.[6]

அச்சுறுத்தல்கள்

[தொகு]

ரைனோபிரிசுடிபார்ம்கள் பல்வேறு வகையான மீன்பிடி உபகரணங்களில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவற்றில் பின்வருவன அடங்கும்:

  • இழுவை
  • செவுள் வலை
  • பார வலை
  • தூண்டில் மற்றும் வரித் தூண்டில்

இவை இறைச்சிக்காக மிக முக்கியமாக இவற்றின் துடுப்புகளுக்காக பிடிக்கப்படுகின்றன. இறைச்சி பெரும்பாலும் உள்நாட்டில் உட்கொள்ளப்படுகிறது. அதே வேளையில் இதன் வெள்ளை துடுப்புகள் ஒரு சுவையான மற்றும் மிகவும் விரும்பப்படுபவையாக உள்ளன. இவை ரைனோபிரிசுடிபார்மின் மிகவும் மதிப்புமிக்க பகுதியாகும். எனவே இவற்றின் துடுப்புகளுக்கு அதிக தேவை உள்ளது. அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் துடுப்புகளுக்காகப் வேட்டையாடல் காரணமாக ரைனோபிரிசுடிபார்மிசின் எண்ணிக்கை வேகமாகக் குறைவதற்குக் காரணமாக அமைகிறது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Peter Last; William White; Marcelo de Carvalho; Bernard Séret; Matthias Stehmann; Gavin Naylor, eds. (2016). Rays of the World. CSIRO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780643109148.
  2. 2.0 2.1 Naylor, G.J.P.; Caira, J.N.; Jensen, K.; Rosana, K.A.M.; Straube, N.; Lakner, C. (2012). Carrier, J.C.; Musick, J.A.; Heithaus, M.R. (eds.). Elasmobranch Phylogeny: A Mitochondrial Estimate Based on 595 Species (2 ed.). CRC Press, Boca Raton, Florida. pp. 31–56. {{cite book}}: |work= ignored (help)
  3. 3.0 3.1 Last, P.R.; Séret, B.; Naylor, G.J.P. (2016). "A new species of guitarfish, Rhinobatos borneensis sp. nov. with a redefinition of the family-level classification in the order Rhinopristiformes (Chondrichthyes: Batoidea)". Zootaxa 4117 (4): 451–475. doi:10.11646/zootaxa.4117.4.1. பப்மெட்:27395187. 
  4. "WoRMS - World Register of Marine Species - Rhinopristiformes". www.marinespecies.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-31.
  5. 5.0 5.1 Aschliman; Nishida; Miya; Inoue; Rosana; Naylord (2012). "Body plan convergence in the evolution of skates and rays (Chondrichthyes: Batoidea)". Molecular Phylogenetics and Evolution 63 (1): 28–42. doi:10.1016/j.ympev.2011.12.012. பப்மெட்:22209858. 
  6. 6.0 6.1 Jabado R.W. (2018). "The Fate of the Most Threatened Order of Elasmobranchs: Shark-like Batoids (Rhinopristiformes) in the Arabian Sea and Adjacent Waters". Fisheries Research 204: 448–457. doi:10.1016/j.fishres.2018.03.022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைனோபிரிசுடிபார்மிசு&oldid=3871325" இலிருந்து மீள்விக்கப்பட்டது