ரைட் லவ்லிவுட் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரைட் லிவ்லிவுட் விருது
விளக்கம்"இன்று உலகம் எதிர்கொள்ளும் மிக அவசரமான சவால்களுக்கு நடைமுறை மற்றும் முன்மாதிரியான தீர்வுகளை மேற்கொள்தல்"
நாடுசுவீடன்
வழங்குபவர்ரைட் லிவ்லிவுட் அறக்கட்டளை
முதலில் வழங்கப்பட்டது1980
இணையதளம்rightlivelihood.org
சுவீடன் ரிக்ஸ்டாக் கட்டிட வளாகத்தில் ரைட் லிவ்லிவுட் விருது வழங்கும் விழா, ஆண்டு 2009
2009இல் ரைட் லல்லிவுட் விருது வழங்கும் விழா

ரைட் லவ்லிவுட் விருது, (Right Livelihood Award) நோபல் பரிசுக்கு மாற்றாக கருதப்படுகிறது.[1][2][3][4][5][1]பன்னாட்டு விருதான ரைட் லவ்லிவுட் விருது, உலகம் எதிர்கொள்ளும் மிக அவசரமான சவால்களுக்கு நடைமுறை மற்றும் முன்மாதிரியான தீர்வுகளை மேற்கொள்பவர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இவ்விருது ஜோகப் வான் எக்ஸ்குல் எனும் ஜெர்மானிய சுவீடன் நாட்டவர் நிறுவிய அறக்கட்டளையால் 1980இல் முதல் வழங்கப்படுகிறது. இவ்விருது ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் சுவீடனில் வைத்து வழங்கப்படுகிறது.[6]சுற்றுச்சூழவியல் பாதுகாப்பு, மனித உரிமைகள், நிலையான வளர்ச்சி, சுகாதாரம், கல்வி மற்றும் பொது அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றிய தனிநபர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது இரண்டு இலட்சம் யூரோ மதிப்பு கொண்டது.[7]

2016இல் விருது பெற்றவர்கள்[தொகு]

சிரியா நாட்டின் வைட் ஹெல்மட் தொண்டு நிறுவனம், துருக்கி நாட்டு ஊடுகவியலாளர் சூம் யூரியெட், எகிப்து நாட்டு பெண்கள் நல பிரசாரகர் மொசன் ஹசான் மற்றும் ருசியாவில் குடியேறிய அகதிகள் உரிமைகளுக்காகப் பணிபுரிந்த கனுஷ்கினா ஆகிய நால்வர்க்கு ரைட் லிவ்லி வுட் விருது வழங்கி பெருமைப் படுத்தப்பட்ட்டது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Indians win 'alternative Nobel'". பிபிசி. 2 October 2008. பார்க்கப்பட்ட நாள் 22 March 2011.
  2. "Peace and Social Justice Workers Receive Alternative Nobel Prize". Deutsche Welle. 2008-10-01. பார்க்கப்பட்ட நாள் 22 March 2011.
  3. "Global activists honoured with 'Alternative Nobel' prize". The Local. 30 Sep 10. பார்க்கப்பட்ட நாள் 22 March 2011. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. "Israeli doctors' group wins 'alternative' Nobel prize". பிபிசி. 30 September 2010. பார்க்கப்பட்ட நாள் 22 March 2011.
  5. "Alternativer Nobelpreis: Kampf gegen Klimawandel, Armut, Kriege ausgezeichnet". Frankfurter Allgemeine Zeitung. 13 October 2009. பார்க்கப்பட்ட நாள் 22 March 2011.
  6. Jawetz, Pincas. 30th Right Livelihood Awards: Wake-up calls to secure our common future. பரணிடப்பட்டது 2010-03-27 at the வந்தவழி இயந்திரம் SustainabiliTank. 13 Oct. 2009.
  7. About the Right Livelihood Award பரணிடப்பட்டது 2011-08-11 at the வந்தவழி இயந்திரம். Accessed October 26, 2010.
  8. சிரியா நிறுவனத்திற்கு மாற்று நோபல் பரிசு

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைட்_லவ்லிவுட்_விருது&oldid=3578170" இலிருந்து மீள்விக்கப்பட்டது