ரைசோபியம்
Jump to navigation
Jump to search
ரைசோபியம் | |
---|---|
அகர் தட்டில் உள்ள ரைசோபியம் டிராபிகி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | பாக்டீரியா |
தொகுதி: | புரோடியோபாக்டீரியா |
வகுப்பு: | ஆல்பாபுரோடியோபாக்டீரியா |
வரிசை: | ரைசோபியேல்கள் |
குடும்பம்: | ரைசோபியேசி |
பேரினம்: | ரைசோபியம் பிராங்கு 1889 |
மாதிரி இனம் | |
ரைசோபியம் லெகுமினோசரம் |
ரைசோபியம் (Rhizobium) என்பது மண்ணில் நைட்ரசன் நிலைப்படுத்துதலில் ஈடுபடக்கூடிய ஒரு பாக்டீரியா பேரினம் ஆகும். இருபுற வெடிக்கனி தாவரங்களில் அவற்றின் வேர்முண்டுகளில் அவற்றின் உள்ளுறைக் கூட்டுயிராக இருந்து நைட்ரசன் நிலைப்படுத்துதலில் ஈடுபடுகிறது. இவ்வகை பாக்டீரியாக்கள் வேர்முண்டுகளில் இருந்து கொண்டு நைட்ரோசெனேசு என்ற நொதியின் உதவியுடன் வளிமண்டல நைட்ரசனை அமோனியாவாக மாற்றி பின்னர் குளூட்டமின் அல்லது யூரைடுகள் போன்ற கரிம நைட்ரசன் சேர்மங்களாக மாற்றி தாவரங்களுக்கு வழங்குகின்றன. மாற்றாக, தாவரமானது, ஒளிச்சேர்க்கையின் மூலம் தயாரிக்கப்பட்ட கரிமச்சேர்மங்களை பாக்டீரியாக்களுக்குத் தருகிறது. [1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Changing concepts in the systematics of bacterial nitrogen-fixing legume symbionts". J. Gen. Appl. Microbiol. 49 (3): 155–79. 2003. doi:10.2323/jgam.49.155. பப்மெட்:12949698.