ரேஷ்மா ஷெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரேஷ்மா ஷெட்டி
பிறப்பு2 நவம்பர் 1977 (1977-11-02) (அகவை 42)
மான்செஸ்டர், இங்கிலாந்து, யுனைட்டெட் கிங்டம்
கல்விஜேம்ஸ் மாடிசன் பல்கலைக்கழகம் (இளங்கலை இசை)
கென்டக்கி பல்கலைக்கழகம் (முதுகலை இசை)
சின்சினாட்டி பல்கலைக்கழகம் (பட்டயச் சான்று)
பணிநடிகை, பாடகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2007 முதல் தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
தீப் கட்டேர்
(m. 2011)

ரேஷ்மா ஷெட்டி (Reshma Shetty) பிறப்பு: நவம்பர் 2, 1977) ஒரு பிரிட்டிஷ், அமெரிக்கக் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை மற்றும் பாடகர் ஆவார். யு.எஸ் நெட்வொர்க் தொலைக்காட்சி தொடரான ராயல் பென்ஸ்ஸில் திவ்யா கட்டேர் என்ற அவரது பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

ஷெட்டி 1977 நவம்பர் 2இல் இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரில் பிறந்தார். இவரின் பெற்றோர்கள் இந்தியர்கள் ஆவர். இவர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் ரிச்மண்ட் (வர்ஜீனியா) ஆகிய இரு நாடுகளிலும் வாழ்ந்தார்.[1] இவர் ஜேம்ஸ் மாடிசன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார், ஆனால், குரல் தேர்வுகளுக்கானப் போட்டிகளில் வெற்றி பெற்ற பின்னர், ஆப்பெராவில் சேர்ந்து தனது படிப்பினை இளங்கலை இசை பட்டப்படிப்பிற்கு மாற்றிக்கொண்டார்.[2] ஷெட்டி கென்டக்கி பல்கலைக்கழகத்தில் இசையில் முதுகலைப்பட்டம் பெற்றார், சின்சின்னாட்டி கன்சர்வேட்டரி ஆஃப் மியூசிக்கிற்கு செல்லுவதற்கு முன்னர், அவர் 2005 இல் ஓபராவில் தனது கலை பட்டயச் சான்றினைப் பெற்றார்.[1][3]

தொழில்[தொகு]

ஷெட்டி ஒரு பாம்பே டிரீம்ஸ் என்ற சுற்றுப் பயண இசைக்குழுவை 2006 முதல் நடத்தி வந்தார். ஷெட்டி ஆஃப் பிராட்வே என்ற நாடகக்குழுவின் ரஃப்டா ரஃப்தா என்ற நாடகத்தில் நடித்துள்ளார்.[3] மேலும், ஷெட்டி அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியான "ராயல் பீன்ஸ்" (யுஎஸ்ஏ நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்பட்டது) என்ற நாடகத்தில் ஒரு நடிகராக நடித்துள்ளார். அந்த நாடகத்தில் மருத்துவ உதவியாளரான திவ்யா கட்டேர் என்ற பெயரில் தோன்றினார்.[4][5] ஃபாக்ஸ் செய்தித் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ரெட் ஐ என்கிற நையாண்டி நிகழ்ச்சியில் அவர் அவ்வப்போது விருந்தினராக பங்கேற்றார். ரேஷ்மா ஷெட்டி இந்தியாவில் டவ் டாய்லட் மாய்ஸ்சரைசர் சோப்பின் முகமாக இருக்கிறார்..

சொந்த வாழ்க்கை[தொகு]

ஷெட்டி தற்போது நியூயார்க் நகரத்தில் வசிக்கிறார், 2001 மார்ச் 19 அன்று ஷெட்டி பிராட்வேயின் தயாரிப்பான, பாம்பே டிரீம்ஸின் நட்சத்திரமான டீப் கட்டேரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அக்டோபர் 2015 ல் அரியா இலியானா என்ற மகள் பிறந்தார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேஷ்மா_ஷெட்டி&oldid=2759322" இருந்து மீள்விக்கப்பட்டது