உள்ளடக்கத்துக்குச் செல்

ரேவா கேத்ரபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு நீதியரசர்
ரேவா கேத்ரபால்
தில்லி லோகாயுக்தா
பதவியில் உள்ளார்
பதவியில்
18 டிசம்பர் 2015
பரிந்துரைப்புதில்லி உயர் நீதிமன்றம்
நியமிப்புபிரணாப் முகர்ஜி
தில்லி உயர் நீதிமன்றம் நீதிபதி
பதவியில்
28 பிப்ரவரி 2006  22 செப்டம்பர் 2014
பரிந்துரைப்புகே. ஜி. பாலகிருஷ்ணன்
நியமிப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 செப்டம்பர் 1952 (1952-09-23) (அகவை 73)
முன்னாள் மாணவர்தில்லி பல்கலைக்கழகம்

ரேவா கேத்ரபால் (Reva Khetrapal பிறப்பு: 23 செப்டம்பர் 1952) இந்திய நீதிபதியாவார். இவர் தற்போது தில்லியின் லோகாயுக்தா (குறைகேள் அதிகாரி) ஆகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு தில்லி உயர் நீதிமன்றம் நீதிபதியாகப் பதவி வகித்தார்.[1][2]

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

ரேவா கேத்ரபால் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் சிம்லாவில் பிறந்தார். பின்னர் தில்லியில் கல்வி பயின்றார். மிராண்டா ஹவுசு கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டமும், தில்லி பல்கலைக்கழகம் சட்டப் பீடத்தில் சட்ட இளங்கலைப் பட்டமும் பெற்றார்.[2]

தொழில் வாழ்க்கை

[தொகு]

1975ஆம் ஆண்டு தில்லி வழக்கறிஞர் மன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்ட இவர், 1991ஆம் ஆண்டு வரை வழக்கறிஞராகப் பணியாற்றினார். தனியார் வாடிக்கையாளர்களுக்காக மட்டுமல்லாமல், தில்லி அரசின் சட்ட ஆலோசகராகவும் செயல்பட்டார்.

1991ஆம் ஆண்டு நீதித்துறையில் நியமிக்கப்பட்டு, தில்லியில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.[3]

1994ஆம் ஆண்டு 1985 போதைப்பொருட்கள் மற்றும் மனநிலையைப் பாதிக்கும் பொருட்கள் சட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[3] அதே ஆண்டில் இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் செயலாளராகவும் பணியாற்றினார்.[2]

தில்லி உயர் நீதிமன்றம்

[தொகு]

2006ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று தில்லி உயர் நீதிமன்றம் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் நிரந்தர நீதிபதியாக பொறுப்பேற்றார். 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று ஓய்வு பெற்றார்.[2]

உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்தார்.

2008ஆம் ஆண்டு, ஆரி புட்டர் எ காமெடி ஆஃப் டெர்ரர்சு திரைப்படம் ஆரி பாட்டர் திரைப்படத் தொடரின் பதிப்புரிமையை மீறவில்லை என்று தீர்ப்பளித்தார். இரு படைப்புகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் தெளிவாக உள்ளன என்று இவர் குறிப்பிட்டார்.[4][5]

நீதிபதி எம். கே. சர்மாவுடன் இணைந்து, அமைச்சர்களின் இல்லங்கள் மற்றும் இவற்றைச் சுற்றியிருந்த சட்டவிரோதக் கட்டிடங்களை அகற்றுவதைத் தடுக்க இந்திய அரசு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், அந்தக் கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டார்.[6]

2010ஆம் ஆண்டு, நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் ஊழலை எதிர்க்கவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாக, தில்லி, கேரளம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களைச் சேர்ந்த சில நீதிபதிகளுடன் இணைந்து, தனது சொத்து விவரங்களை தில்லி உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் தன்னார்வமாக வெளியிட்டார்.[7]

2012ஆம் ஆண்டு, இந்தியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா விமானிகளின் நீடித்த வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கை விசாரித்தார். இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வை எட்ட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.[8]

பின்னர் அந்த வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டதுடன், விமானிகள் மீண்டும் பணிக்குத் திரும்புமாறும் உத்தரவிடப்பட்டது.[9][10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ex-High Court Judge Reva Khetrapal Takes Oath As Delhi's Lokayukta". NDTV.com. Retrieved 2020-11-15.
  2. 1 2 3 4 "Former Judges: Justice Reva Khetrapal". தில்லி உயர் நீதிமன்றம்.
  3. 1 2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; "Reva Ref1" என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. Chamberlain, Gethin (2008-09-27). "Hari Puttar fails to conjure Harry Potter magic" (in en-GB). The Observer. https://www.theguardian.com/film/2008/sep/28/india.hari.puttar.
  5. "Hari Puttar: The boy who won - Times of India". The Times of India (in ஆங்கிலம்). 23 September 2008. Retrieved 2020-11-15.
  6. "Demolish illegal constructions in Arjun Singh's house: HC". DNA India (in ஆங்கிலம்). 2008-01-16. Retrieved 2020-11-15.
  7. "Delhi High Court Makes Public Assets of Its Judges". Outlook India. Retrieved 2020-11-15.
  8. Correspondent, dna (2012-07-03). "AI strike: Court says solve the dispute amicably". DNA India (in ஆங்கிலம்). Retrieved 2020-11-15. {{cite web}}: |last= has generic name (help)
  9. "Air India Pilots End Strike Over Plane Assignments (Published 2012)" (in en-US). The New York Times. Reuters. 2012-07-04. https://www.nytimes.com/2012/07/05/business/global/air-india-pilots-end-strike.html.
  10. "Air India pilots 'to end strike'" (in en-GB). BBC News. 2012-07-03. https://www.bbc.com/news/world-asia-india-18684802.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேவா_கேத்ரபால்&oldid=4583503" இலிருந்து மீள்விக்கப்பட்டது