உள்ளடக்கத்துக்குச் செல்

ரேவதி மோகித் டெரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு தலைமை நீதிபதி
ரேவதி மோகித் டெரே
மேகாலயா உயர் நீதிமன்றத்தின் 15-வது தலைமை நீதிபதி
பதவியில் உள்ளார்
பதவியில்
10 ஜனவரி 2026
பரிந்துரைப்புசூர்யகாந்த் சர்மா
நியமிப்புதிரௌபதி முர்மு
முன்னையவர்சௌமன் சென்
பம்பாய் உயர் நீதிமன்றதின் நீதிபதி
பதவியில்
21 ஜூன் 2013  9 ஜனவரி 2026
பரிந்துரைப்புஅல்தமஸ் கபீர்
நியமிப்புபிரணப் முகர்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 ஏப்ரல் 1965 (1965-04-17) (அகவை 61)
புனே, மகாராட்டிரம்
பெற்றோர்விஜய்ராவ் ஏ. மோகித்
கல்விஇளங்கலைச் சட்டம், முதுகலைச் சட்டம்
முன்னாள் மாணவர்சிம்போசியஸ் சட்டக் கல்லூரி, பெர்க்குசன் கல்லூரி, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்,

ரேவதி மோகித் டெரே (Revati Mohite Dere) பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக உள்ளார். இந்தியாவில் குற்றவியல் நடைமுறை மற்றும் காவல்துறை விசாரணைகள் தொடர்பாக, குற்றவியல் வழக்குகளைப் பற்றி செய்தி வெளியிடுவதற்கான பத்திரைக்கைச் சுதந்திரம், மீண்டும் மீண்டும் செய்யும் குற்றங்களுக்கான மரண தண்டனைகள், மற்றும் தவறான மற்றும் முறையான விசாரணைகளுக்கான காவல்துறையின் பொறுப்புக்கூறல் ஆகியவை தொடர்பான வழக்குகள் உட்பட, பல முக்கியமான தீர்ப்புகளை இவர் எழுதியுள்ளார்.[1]

வாழ்க்கை

[தொகு]

நீதிபதி டெரே மகாராட்டிராவின் புனேவில் பிறந்து கல்வி பயின்றார். மேலும் சிம்பியோசிஸ் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். பின்னர், சட்டத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றார். பொதுநலவாய நாடுகளின் அறக்கட்டளை உதவித்தொகையில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் முதுகலையைப் பட்டமும் பெறுள்ளார்.[1]

தொழில் வாழ்க்கை

[தொகு]

ரேவதி மோகித் டெரே பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். மேலும் மகாராட்டிர அரசாங்கத்தின் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 21 ஜூன் 2013 அன்று பம்பாய் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 2 மார்ச் 2016 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.[2] தற்போது பம்பாய் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார்.

2025 டிசம்பர் 18 அன்று, தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் இவரை மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது.[3] மத்திய அரசு 1 ஜனவரி 2026 அன்று தலைமை நீதிபதியாக இவரது பதவி உயர்வுக்கு ஒப்புதல் அளித்தது.[4] இதனையடுத்து இவர் 10 ஜனவரி 2026 இல் மேகாலயா உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது பெண் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.[5][6]

குறிப்பிடத்தக்கத் தீர்ப்புகள்

[தொகு]

ரேவதி டெரே, பல அமர்வுகளில் அங்கம் வகித்துள்ளார். மேலும், காவல்துறை பொறுப்புக்கூறல் மற்றும் ஊழல், அத்துடன் பெண்கள் உரிமைகள் மற்றும் பொது நலன் தொடர்பான பல உத்தரவுகளையும் இவர் தனிப்பட்ட முறையில் பிறப்பித்துள்ளார்.

2015-ஆம் ஆண்டில், நீதிபதி வி.எம். கனடேவுடன் சேர்ந்து, காவல் மரணங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அத்தகைய மரணங்களுக்குப் பொறுப்பான காவல்துறையினரை விசாரித்து இடைநீக்கம் செய்யவும் மகாராட்டிர அரசுக்கு உத்தரவிட்டனர்.[7]

2016 ஆம் ஆண்டில், ஹாஜி அலி தர்கா (மும்பையிலுள்ள ஒரு பள்ளிவாசல்) உள் கருவறைக்குள் பெண்களை அனுமதிப்பதற்கான தடை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறிய ஒரு அமர்வின் ஒரு பகுதியாக இவர் இருந்தார். மேலும் பெண்கள் நுழைந்து வழிபட அனுமதிக்குமாறு பள்ளிவாசலின் நிர்வாக அறக்கட்டளைக்கு உத்தரவிட்டார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Bose, Meghnad (2018-03-02). "The Record of Justice Dere, Judge Reassigned From Sohrabuddin Case". TheQuint (in ஆங்கிலம்). Retrieved 2020-10-02.
  2. "Revati Mohite Dere". High Court of Judicature at Bombay.
  3. Choudhury, Ritwik (2025-12-18). "Supreme Court Collegium recommends Bombay HC Justice Revati Mohite Dere as Meghalaya High Court Chief Justice". Bar and Bench - Indian Legal news (in ஆங்கிலம்). Retrieved 2025-12-19.
  4. Bench, Bar & (2026-01-01). "Centre clears appointment of Bombay HC Justice Revati Mohite Dere as Meghalaya High Court Chief Justice". Bar and Bench - Indian Legal news (in ஆங்கிலம்). Retrieved 2026-01-01.
  5. Reporter (2026-01-10). "Second woman Chief Justice assumes office". Meghalaya Monitor (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-01-10.
  6. Meghalaya, Syllad | The Rising (2026-01-10). "Meghalaya gets new Chief Justice: Revati Mohite Dere sworn in". Syllad (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-01-10.
  7. "Won't tolerate custodial deaths, Bombay HC tells Maharashtra" (in en-IN). The Hindu. 2015-12-09. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/mumbai/wont-tolerate-custodial-deaths-bombay-hc-tells-maharashtra/article7963835.ece.
  8. Ghadyalpatil, Abhiram (2016-08-26). "Haji Ali case: Bombay HC lifts ban on women's entry into inner sanctum". mint (in ஆங்கிலம்). Retrieved 2020-10-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேவதி_மோகித்_டெரே&oldid=4580754" இலிருந்து மீள்விக்கப்பட்டது