ரேவதி காமத்
ரேவதி காமத் | |
---|---|
![]() | |
தனிப்பட்ட விவரங்கள் | |
நாட்டினம் | ![]() |
பிறப்பு | 1955 புவனேசுவரம், ஒடிசா, இந்தியா |
இறப்பு | 21 சூலை 2020 (அகவை 64–65) |
பணி |
ரேவதி எஸ். காமத் (Revathi S. Kamath) (1955-2020) தில்லியைத் தளமாகக் கொண்ட ஒரு இந்தியக் கட்டடக் கலைஞரும் மற்றும் திட்ட வரைவாளரும் ஆவார். இந்தியாவில் மண் கட்டடக்கலையின் முன்னோடியாக உள்ளார். இது தவிர, இந்தியாவின் மிக உயரமான எஃகு கட்டமைப்பை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.[1][2]
இளமை வாழ்க்கை
[தொகு]ரேவதி காமத் ஒடிசாவின் புவனேசுவரத்தில் ஒரு தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். தனது ஆரம்ப ஆண்டுகளை பெங்களூர் மற்றும் மகாநதி ஆற்றின் குறுக்கே உள்ள பழங்குடிப் பகுதிகளில் கழித்தார். அங்கு இவரது தந்தை, பொறியாளராக ஈராக்குது அணையில் பணிபுரிந்தார். இங்கு பணிபுரிந்த ஆரம்ப ஆண்டுகள் இயற்கை, மக்கள் மற்றும் வாழ்க்கையின் தாளங்களைப் பற்றிய இவரது புரிதலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.
கல்வி
[தொகு]ரேவதி கட்டடக்கலையில் இளங்கலை பட்டம் பெற்றார் (1977). நகர்ப்புற மற்றும் பிராந்திய திட்டமிடல் (1981) துறையில் முதுகலை பட்டத்தை தில்லியின் இந்தியக் கட்டடக்கலை பள்ளியில் முடித்தார்.[3] பிறகு, இவர் இசுடெய்ன், தோஷி மற்றும் பல்லா ஆகியோருடன் ஒரு வருடம் பணியாற்றினார், பின்னர் புதுதில்லியில் ரஸிக் இன்டர்நேஷனல், கட்டடக் கலைஞர்கள் மற்றும் தளபாட வடிவமைப்பாளர்களுடன் பணியாற்றினார். 1979 ஆம் ஆண்டில், வசந்த் காமத், ரோமி கோஸ்லா மற்றும் நரேந்திர டெங்லே ஆகியோருக்கு இடையிலான கூட்டு நிறுவனமான தி ஜிஆர்யுபி (கிராமப்புற மற்றும் நகர்ப்புற திட்டமிடலுக்கான குழு) உடன் இவர் பணியாற்றத் தொடங்கினார். 1981 ஆம் ஆண்டில் தேசிய நகர்ப்புற விவகார நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். புதுதில்லியில் உள்ள இந்தியக் கட்டடக்கலைப் பள்ளியில் வருகைதரும் ஆசிரியராகவும் (1984–87) மற்றும் உதவி பேராசிரியராகவும் (1987–91) பணிபுரிந்தார்.
கட்டடக்கலை பணி
[தொகு]1981 ஆம் ஆண்டில், வசந்த் காமத்துடன் இணைந்து "ரேவதி மற்றும் வசந்த் காமத்" என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இது பின்னர் "காமத் டிசைன் ஸ்டுடியோ-கட்டடக்கலை, திட்டமிடல் மற்றும் சுற்றுச்சூழல்" (2005) என்று பெயரிடப்பட்டது. இந்த நிறுவனம் பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் புவியியல் சூழல்களில் பல்வேறு வகையான திட்டங்களை கையாண்டுள்ளது. தில்லியின் ஷாதிப்பூர் டிப்போவுக்கு அருகிலுள்ள குடிசைப்பகுதிவாசிகளின் மறுவாழ்வுக்கான ஆனந்த்கிராம் திட்டம் 1983 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட ஒன்றாகும். மறுவளர்ச்சிக்கான "வளர்ந்து வரும் வீடு" என்ற கருத்தை உருவாக்குவதற்கான அவரது உணர்திறன் மிக்க முயற்சிகளுக்காக ரேவதி காமத் குறிப்பிடத்தக்கவர். தனிப்பட்ட தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும், அவர்களுக்கு முதல் வீட்டை வழங்குவதற்கும் இவர் 350 குடும்பங்களுடன் ஆலோசனை நடத்தினார்.[4]
இவரது, தில்லியில் உள்ள அக்சய் பிரதிஷ்டன் பள்ளி, மகேஷ்வரில் உள்ள சமூக மையம் மற்றும் தில்லியின் ஹவுஸ் காஸில் உள்ள நளின் தோமர் ஹவுஸ் மூன்று திட்டங்கள் அகா கான் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. [5]
1986 ஆம் ஆண்டில் பாரிசில் நடந்த இந்திய விழாவுக்கான "இந்தியாவின் பாரம்பரிய கட்டிடக்கலை" என்ற கண்காட்சியில் ரேவதி பங்களித்துள்ளார்.[6] நித்திய காந்தி பல்லூடக அருங்காட்சியகத்திற்கான வடிவமைப்பு குழுவில் பங்களிப்பாளராகவும் இருந்தார். 2003 ஆம் ஆண்டில் இந்திய தன்னார்வ சுகாதார சங்கம் என்ற அமைப்பிற்கன "கைவினை: சமூக மாற்றத்திற்கான ஒரு கருவி" என்ற கண்காட்சியின் இணைக் கண்காணிப்பாளராகவும் வடிவமைப்பாளராகவும் இருந்தார்.[7] போபாலிலுள்ள பழங்குடி அருங்காட்சியகம், போபால், தில்லியில் உள்ள ஞான மையம், விழிப்புணர்வு வளர்ச்சிக்கான ஆராய்ச்சி மையம், ஜீவா ஆரோக்கிய மையம் மற்றும் யோகா அறிவியலுக்கான ஜீவா பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் பணியாற்றினார்.
விருதுகளும் கௌரவங்களும்
[தொகு]- ரேவதி காமத், கலை, கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பில் உலக பெண்கள் -2018 இல் நிலைத்தன்மை விருதைப் பெற்றார்.[8]
- ரேவதி காமத் மதிப்புமிக்க அகா கான் விருதையும் பெற்றுள்ளார்.[9]
இதனையும் காண்க
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- India modern: traditional forms and contemporary design, Phaidon, 2000 .பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0714839485.
- Architecture + design: volume 9
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "School of Mobile Crèches". Dome.mit.edu. Retrieved 2013-03-03.
- ↑ http://www.stainlessindia.org/UploadPdf/June-2006.pdf
- ↑ Architecture in India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-86653-031-4
- ↑ "Artistically Informal". aecworldxp. Archived from the original on 21 March 2012. Retrieved 2013-03-03.
- ↑ "Revathi & Vasant Kamath, Vasanth and Revathi Kamath Architects, New Delhi". aecworldxp. Archived from the original on 21 March 2012. Retrieved 2013-03-03.
- ↑ [Architecture in India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-86653-031-4]
- ↑ "Eternal Gandhi MMM". Eternalgandhi.org. Archived from the original on 26 July 2011. Retrieved 2013-03-03.
- ↑ "Remembering Ar. Revathi Kamath". RTF | Rethinking The Future (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-07-23. Retrieved 2022-03-15.
- ↑ "TO THE PASSION, PERSISTANCE & PROWESS OF AR. REVATHI KAMATH". www.magzter.com (in ஆங்கிலம்). Retrieved 2022-03-15.
வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.aecworldxp.com/aecvideo/revathi-vasant-kamath-vasanth-and-revathi-kamath-architects-new-delhi பரணிடப்பட்டது 21 மார்ச் 2012 at the வந்தவழி இயந்திரம்
- http://www.aecworldxp.com/aecvideo/artistically-informal பரணிடப்பட்டது 21 மார்ச் 2012 at the வந்தவழி இயந்திரம்
- http://www.kamathdesign.org/ பரணிடப்பட்டது 7 பெப்ரவரி 2013 at the வந்தவழி இயந்திரம்
- [1]